Home
News

BSNL விஸ்வரூபம்.. 4G, 5G-க்கு இதை செய்துடுங்க.. Jio, Airtel கட்டண உயர்வு.. நேரடியாக பிரதமர் மோடி.. உடனடி தேவை!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் அந்த நிறுவனத்தின் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி வருகிறது. ஏற்கனவே, பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளின் விற்பனை அதிகரித்து இருக்கும் நேரத்தில் 4ஜி, 5ஜி சேவையை விரைவில் வழங்க பிரதமர் மோடியின் நேரடி பார்வ்வையில் மற்றொரு தரமான சம்பவம் நடந்துள்ளது. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கப் போகிறது.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை டெலிகாம் கட்டணங்களை உயர்த்தியதில் (Telecom Tariff Hike) இருந்து, பிஎஸ்என்எல்லுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். பல்வேறு மாநிலங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் (BSNL 4G Services) தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டின் திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இப்போது 4ஜி சேவை கிடைக்கிறது.

BSNL விஸ்வரூபம்.. 4G-க்கு இதை செய்துடுங்க.. Jio, Airtel கட்டண உயர்வு!

மற்ற மாவட்டங்களிலும் டவர் மேம்பாட்டு பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களில் ரூ 299 மதிப்பில் கிடைக்கும் சலுகைகளானது, பிஎஸ்என்எல்லில் வெறும் ரூ 199 விலைக்கு கிடைக்கிறது. அதிலும் அந்த நிறுவனங்களில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால், பிஎஸ்என்எல் 30 நாட்களுக்கு சலுகைகளை கொடுக்கிறது. இப்படி மலிவான விலைக்கே திட்டங்கள் இருக்கின்றன.

இப்படி ஒட்டுமொத்தமாக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. மற்ற நிறுவனங்களை தவிர்த்துவிட்டு முற்றிலும் பிஎஸ்என்எல்லுக்கு மாறுங்கள் என்ற பிரச்சாரமே சோஷியல் மீடியாக்களில் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் 3 கோடி உறுப்பினர்களை கொண்ட பாரதிய மஸ்தூர் சங்கம் - பிஎம்எஸ் (Bharatiya Mazdoor Sangh - BMS) நேரடியாக பிரதமர் மோடியை களத்தில் இழுத்துள்ளது.

தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களின் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல்லின் 4ஜி, 5ஜி சேவைகளை உடனடியாக தொடங்குவது, நாட்டின் நலனுக்கானது மட்டுமல்ல, இந்திய குடிமக்களுக்கும் உடனடி தேவையாக மாறிவிட்டது. தனியாரின் ஏகபோக விலையை சரிகட்ட பிஎஸ்என்எல்லின் சேவை மிகவும் அவசியமாதாகும் என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல், உள்நாட்டு தொழில்நுட்ப தாமதத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.

இதுகுறித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலர் ரவீந்திர ஹிம்தே, பிரதமர் மோடிக்கு (PM Modi) அனுப்பிய கடிதத்தில், முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தின. இதனால் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு பெரும் தொகையை வழங்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்த நேரத்தில் பிஎஸ்என்எல் முழு அளவில் 4ஜி, 5ஜி சேவையை வழங்கவில்லை.

பிஎஸ்என்எல் டெலிகாம் சந்தையில் சமநிலையாளராக செயல்பட்டு வருகிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்களின் விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்கிறது. சொல்லப்போனால், பிஎஸ்என்எல் நிறுவனம், இன்கமிங் சேவைகளை இலவசமாக்கிய பிறகே ​​மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கும் இதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்படி பிஎஸ்என்எல்லின் இருப்பு முக்கியமானதாகும்.

ஆனால், பிஎஸ்என்என் 4ஜி, 5ஜி சேவைகள் முழு அளவில் வழங்கப்படவில்லை. ஏனென்றால், வெளிநாட்டு தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உள்நாட்டு தொழில்நுட்பத்தை முழுவதும் ஆதாரித்தாலும், அது கிடைக்கும் வரை தற்போதுள்ள மற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

இது நாடு மற்றும் பிஎஸ்என்எல் நலனுக்காக மட்டுமல்ல, சாமானியர்களுக்கும் அவசியமானதாகும். 4G, 5G சேவை கிடைக்காததால், பிஎஸ்என்எள் கஸ்டமர்களால் அதிவேக டேட்டாவை பயன்படுத்த முடியவில்லை, இது சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆகவே, பிஎஸ்என்எல் அதை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிஎம்எஸ் வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, வரும் நாட்களில் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாமதம் அதிவிரைவில் சரி செய்யப்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே மற்ற டெலிகாம் நிறுவனங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்த அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இரண்டில் எது நடந்தாலும், மலிவான விலையில் திட்டங்கள் கிடைப்பது உறுதியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Need To Upgrade 4G 5G Technologies From Global Vendors Amid Telecom Tariff Hike BMS to PM Modi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X