Home
News

மே 14 வரை அசல் விலையை விட கம்மி விலைக்கு ரீசார்ஜ்.. 3 திட்டம் மீது Mother’s Day ஆபர்.. BSNL-ன் அம்மா பாசம்!

2025 அன்னையர் தினத்தை (Mother's Day 2025) கொண்டாடும் விதமாக.. அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனம், அதன் 3 ரீசார்ஜ் பிளான்கள் மீது சிறப்பு சலுகைகளை (BSNL Mothers Day Special Offer) அறிவித்துள்ளது. என்ன சலுகை? என்னென்ன திட்டங்கள் மீது கிடைக்கும்? இதோ விவரங்கள்:

இந்த ஆண்டு மே 11 ஆம் தேதி, அதாவது வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 2025 ஆம் ஆண்டு மே 7 முதல் மே 14 வரை செல்லுபடியாகும் "டிஸ்கவுண்ட்" ஆபர் ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதன்கீழ் 3 திட்டங்கள் அசல் விலையை விட குறைக்கப்பட்ட தள்ளுபடி விலையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

3 திட்டம் மீது Mother’s Day ஆபர்..BSNL-ன் அம்மா பாசம்!

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்ட் வழியாக, அதன் 3 ரீசார்ஜ் திட்டங்களில் 5% தள்ளுபடியை அறிவித்துள்ளது. அந்த திட்டங்கள் ரூ.2399, ரூ.997 மற்றும் ரூ.599 ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும். இந்த 3 திட்டங்களும் தற்போது 5% தள்ளுபடி விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. பிஎஸ்என்எல்-ன் செல்ப் கேர் ஆப் அல்லது பிஎஸ்என்எல் -ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இந்த திட்டம் 395 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், 2ஜிபி ஹைஸ்பீட் டேட்டா மற்றும் இந்தியாவிற்குள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது. கூடுதலாக, பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டமானது BiTV-க்கான இலவச அணுகலையும் கொண்டுள்ளது, இது வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் வழியாக 350க்கும் மேற்பட்ட லைவ் டிவி ஸ்டேஷன்களை பார்க்க அனுமதிக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இந்த திட்டம் 160 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், 2ஜிபி ஹைஸ்பீட் டேட்டா மற்றும் இந்தியாவிற்குள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது. கூடுதலாக இது BiTV-க்கான இலவச அணுகலையும் கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.599 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், 3ஜிபி ஹைஸ்பீட் டேட்டா மற்றும் இந்தியாவிற்குள் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது. இதுவும் BiTV-க்கான இலவச அணுகலை வழங்குகிறது.

தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் ஆன ரிலைஐன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் விஐ என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது வரையிலாக.. எந்த விதமான 2025 மதர்ஸ் டே சலுகைகளையும் அறிவிக்கவில்லை, ஒருவேளை அறிவித்தால்.. அதை உடனே அப்டேட் செய்கிறோம்:

ஏர்டெல் சேவையில் செய்யப்பட்டுள்ள 2 முக்கிய மாற்றங்கள்: முதல் மாற்றம் - ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட்பெயிட் சேவையின் கீழ் உள்ள என்ட்ரி லெவல் இன்டர்நேஷனல் ரோமிங் (ஐஆர்) பேக்கில் ஒரு பெரிய திருத்தத்தை செய்துள்ளது. ரூ.649 மதிப்புள்ள பழைய ஐஆர் பேக்கை நீக்கிவிட்டு, உலகளவில் பயன்படுத்தக்கூடிய மற்றும் மேம்பட்ட டேட்டா நன்மைகளுடன் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏர்டெல் போஸ்ட்பெய்டு ஐஆர் பேக்கி விலை ரூ.648 ஆகும். 189 நாடுகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டாவுடன் தொகுக்கப்பட்டுள்ளது. அதாவது இதன்கீழ் 1ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும், அதன் பிறகு 80கேபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்

வாய்ஸ் காலிங் நன்மைகளை பொறுத்தவரை, இதன் கீழ் 100 நிமிட அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் இந்தியாவிற்கு) கிடைக்கும. எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை இது இலவச இன்கமிங் எஸ்எம்எஸ், 10 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் ஆகும். சர்வதேச ரோமிங்கில் இருக்கும்போது செய்யப்படும் சர்வதேச அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது மாற்றம் - பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் வாய்ஸ் காலிங் சேவையில், பிஸ்னஸ் நேம் டிஸ்பிளே (Business Name Display) என்கிற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது வணிக நிறுவனங்களின் வெளிச்செல்லும் அழைப்புகளின் போது பெறுநரின் மொபைல் ஸ்க்ரீனில் தங்கள் பிராண்ட் பெயரை காட்ட அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இந்த அம்சம் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்-ஆல் இயங்கும் ஸ்பேம் பில்டர்-ஐ பயன்படுத்தி, ஏர்டெல் பயனர்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை "சந்தேகத்திற்குரிய ஸ்பேம்" என அடையாளம் கண்டு வகைப்படுத்த, ஒரு தனியுரிம வழிமுறையை பயன்படுத்துகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Mothers Day 2025 Special Offer 5 Percentage Discount On 3 Recharge Plans Until May 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X