BSNL-க்கு குவியுது கூட்டம்.. Netflix, Amazon Prime உடன் புதிய ரீசார்ஜ் திட்டங்களா? எப்பா என்ன லிஸ்ட் நீளுது?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் சமீபத்தில் நடத்திய அதன் ஆஸ்க் பிஎஸ்என்எல் (AskBSNL) என்ற நிகழ்வில் பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் AskBSNL என்ற நிகழ்வை நடத்தியது. இதில் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) மற்றும் அமேசான் பிரைம் (Amazon Prime) போன்ற சந்தாக்களுடன் கூடிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறியிருக்கிறார். இது பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இது வரை பல விலை பிரிவுகளில் பல நன்மைகளை வாரி வழங்கும் ப்ரபைட் திட்டங்களை மக்களுக்காக வழங்கி வருகிறது. இதில் பல ஓடிடி நன்மைகளுடன் கிடைக்கும் திட்டங்களையும் பிஎஸ்என்எல் தன் வசம் வைத்துள்ளது. என்ன தான் பல OTT நன்மைகளை BSNL வழங்கி வந்தாலும், பிரபலமான OTT தளங்களுக்கான சந்தாவை பிஎஸ்என்எல் வழங்காமல் இருந்து வந்தது.

BSNL-க்கு குவியுது கூட்டம்.. Netflix, Amazon Prime உடன் புதிய ரீசார்ஜ் திட்டங்களா?
நெட்ஃபிளிக்ஸ் (Netflix) மற்றும் அமேசான் பிரைம் (Amazon Prime) ஆகிய இரண்டு பிரபலமான OTT தளங்களின் நன்மையை இணைத்து, புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த ஸ்ட்ரீமிங் சேவைகளைக் (streaming service) கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை வழங்காத இந்தியாவின் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டராக (Telecom Operator) பிஎஸ்என்எல் மட்டுமே தனித்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், AskBSNL நிகழ்வின் போது, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற OTT பயன்பாடுகளை உள்ளடக்கிய மொபைல் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து CM, BSNL இன் இயக்குனரிடம் ஒரு பயனர் விசாரித்தார். இதற்குப் பதிலளித்த அவர், BSNL உண்மையில் OTT சலுகைகளுடன் சில ரீசார்ஜ் திட்டங்களை இப்போது பல விலை பிரிவில் வழங்கி வருகிறது என்று கூறியிருந்தார்.
BSNL-ல் விரைவில் Netflix மற்றும் Amazon Prime சந்தா திட்டங்கள்:
இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனம் வரைவில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமுடன் இணைந்த திட்டங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தெரிவித்திருக்கிறார். நெட்ஃபிக்ஸ் நாட்டின் மிக பிரீமியம் OTT (ஓவர்-தி-டாப்) தளமாக கருதப்படுகிறது. மற்ற சேவைகளுடன் ஒப்பிடும்போது அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் சந்தா கட்டணம் மொபைல் மற்றும் டிவி, டெஸ்க்டாப், HD என்று பல விலை பிரிவுகளை கொண்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, அமேசான் பிரைம் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் ரீடிங் (Amazon Prime Reading), அமேசான் ப்ரைம் ஷாப்பிங் (Amazon Prime Shopping), அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video), அமேசான் பிரைம் மியூசிக் (Amazon Prime Music) மற்றும் பல பலன்களை ஒரே சாந்தாவின் கீழ் தொகுத்து வழங்குகிறது. இது நெட்பிளிக்ஸ் போல அல்லாமல், அமேசான் பிரைம் சந்தா பட்ஜெட் விலையில் வருகிறது.
BSNL அறிமுகம் செய்யும் மற்ற புதிய சேவைகளின் பட்டியல்:
இது தவிர, புதிய பிஎஸ்என்எல் eSIM (BSNL eSIM Service) வசதி கிடைப்பது பற்றியும் அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மார்ச் 2025 இல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். இது தவிர, BSNL பிஎஸ்என்எல் இன்னும் 3 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
இதில், பிஎஸ்என்எல் இன்ட்ராநெட் டிவி (BSNL Intranet TV - BiTV), நேஷனல் Wi-Fi ரோமிங் (National Wi-Fi Roaming Facility), இன்ட்ராநெட் ஃபைபர் அடிப்படையிலான டிவி (BSNL Intranet Fibre-based TV - IFTV) ஆகிய மூன்று சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. ஜூலையில் தொடங்கி கடந்த நான்கு மாதங்களில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான புதிய சந்தாதாரர்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை சந்தித்துள்ளது. இது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel ) மற்றும் விஐ (Vi) உள்ளிட்ட தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்களது மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்தீய பிறகு நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications








