"இந்த" நன்மைகளை கேட்டால் ஜியோவை தூக்கிப்போட்டு பிஎஸ்என்எல்-க்கு மாறி விடுவீர்கள்.!

|

சமீபத்தில் (கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி) அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 'பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக் ஆஃபர் என்கிறவொரு திட்டத்தை அறிவித்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 50% வரை கேஷ்பேக் சலுகைகால கிடைத்த வண்ணம் உள்ளது.

தற்போது மகா சிவராத்திரியை முன்னிட்டு பிஎஸ்என்எல் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டமான 'மேக்ஸிமம்' வாய்ப்பை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது மற்றும் அது சுவாரசியமான நன்மைகளையும் கொண்டுள்ளது.

ஒரு வருடம் முழுவதும் நன்மை

ஒரு வருடம் முழுவதும் நன்மை

அறிமுகமாகியுள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டமானது ஒர் ஆண்டு திட்டமாகும் மற்றும் இதன் விலை ரூ.999/- ஆகும். ரீசார்ஜ் செய்த தேதி முதல் - இரண்டு தொகுப்புகளாக - ஒரு வருடம் முழுவதும் நன்மைகளை அளிக்கும் இந்த புதிய மேக்ஸிமம் திட்டமானது என்.இ ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாம் தவிர அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும்.

கடுமையாக போட்டி

கடுமையாக போட்டி

தற்காலத்தில் அனைத்து ஆப்ரேட்டர்களிடமும் இருந்து கிடைக்கும் நன்மைகளை போலவே, இந்த திட்டம் குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் தரவு நன்மைகளை வழங்குகிறது. உடன் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து வெளியாகியுள்ள இந்தத் திட்டம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் நீண்டகால செல்லுபடியாகும் திட்டங்களுடன் கடுமையாக போட்டிபோடுகிறது.

'மேக்ஸிமம்' திட்டத்தின் நன்மைகள்

'மேக்ஸிமம்' திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல்- ன் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா என்கிற வரம்பை கொண்டுள்ள டேட்டாவை வழங்குகிறது. உடன் மும்பை மற்றும் தில்லி வட்டாரங்களை தவிர்த்து ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளையும் வழங்குகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம்

வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம்

உடன் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. டேட்டா நன்மையை பொறுத்தமட்டில், 1ஜிபி என்கிற வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.அந்த வேகமானது வாட்ஸ்ஆப் செய்திகளை அனுப்பவும் பெறவும் போதுமானது.

ஆக வரம்பற்ற டேட்டா

ஆக வரம்பற்ற டேட்டா

ஆக இந்த திட்டமானது வரம்பற்ற தரவை வழங்குகிறது என்னது ஒரு நல்ல கூடுதல் விற்பனை புள்ளியாகும். மும்பை மற்றும் தில்லி பகுதிகளுக்கான குரல் அழைப்புகளுக்கு மட்டும் நிமிடத்திற்கு 60 பைசாக்கள் வசூலிக்கப்படும்.

அடுத்த 182 முதல் 365 நாட்களுக்கு

அடுத்த 182 முதல் 365 நாட்களுக்கு

மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளானது ரீசார்ஜ் செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து, அதாவது 0 முதல் 181 நாட்களுக்கு முதல் தொகுப்பாக செல்லுபடியாகும். அடுத்த 182 முதல் 365 நாட்கள் வரையிலாக ஆன்-நெட் மற்றும் ஆப்-நெட் ஆகிய இருவகையான அழைப்புகளுக்கும் நிமிடத்திற்கு 60 பைசா என்று வசூலிக்கப்படும்.

ஏர்டெல்

ஏர்டெல்

தேசிய ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 உள்ளூர் மற்றும் எல்.டி.டி எஸ்எம்எஸ், 90 நாட்களுக்கு அனைத்து கைபேசிகளுக்கும் 60 ஜிபி அளவிலான தரவு ஆகிய நன்மைகளை ஏர்டெல் வழங்குகிறது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை எந்தவித வரம்பும் இல்லாமல் வழங்குகிறது.

ஜியோ

ஜியோ

உடன் தினம் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் 60 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமோ அதிகபட்சமக 180 நாட்களுக்கு 180 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து மற்றொரு சிறந்த பகுதியாக குறிப்பிட்ட மூன்று வட்டங்களை தவிர்த்து நாடு முழுவதும் இந்த திட்டம் செல்லுபடியாகும்

பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக்

பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 'பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக் ஆஃபரை பொறுத்தமட்டில் ரூ.250/-க்கும் குறைவான விலை மதிப்பு கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு அதிகபட்சமக இந்த போன்பே கேஷ்பேக் ஆஃபர் வாய்ப்பின் மூலம் ரூ.50/- கிடைக்கும். மற்றும் அதற்கு மேலான ரீசார்ஜ்களுக்கு ரூ.75/- கிடைக்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

போன்பே பயன்பாட்டின் வழியாக மட்டுமே

போன்பே பயன்பாட்டின் வழியாக மட்டுமே

உதாரணமாக பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பயனர்கள் ரூ.100/- மதிப்பிலான ரீசார்ஜ் செய்தால் ரூ.50/-க்கான கேஷ்பேக் வாய்ப்பை பெறலாம். இதை போன்பே பயன்பாட்டின் வழியாக மட்டுமே நிகழ்த்தமுடியுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு முறையும் கிடைக்காது

ஒவ்வொரு முறையும் கிடைக்காது

உடன் போன்பே பயன்பாட்டை பயன்படுத்தி நிகழ்த்தும் முதல் ரீசார்ஜுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் வாய்ப்பு கிடைக்கும் என்பதையும், ஒவ்வொரு முறையும் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. வேலட், கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் அல்லது நிகர பேங்கிங் மூலம் கேஷ்பேக்கை பெறலாம்.

வரம்பற்ற தரவு + ரோமிங் குரல் அழைப்பு

வரம்பற்ற தரவு + ரோமிங் குரல் அழைப்பு

இதற்கு முன்னர் பிஎஸ்என்எல் தனது புதிய "கூல்" என்கிற அற்புதமான திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய கூல் திட்டத்தின் வாயிலாக வரம்பற்ற தரவு அணுகலுடன் சேர்த்து வரம்பற்ற உள்ளூர் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் உடனான ரோமிங் குரல் அழைப்புகளையும் அனுபவிக்கலாம். மேலும் செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறலாம்.

84 நாட்களுக்கு செல்லுபடி

84 நாட்களுக்கு செல்லுபடி

ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் ரூ.1099/- ஆகும்.. அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது 4ஜி சேவைகளை நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அது 4ஜி சேவைகளை தொடங்கியும் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது

டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது

டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது

மேற்குறிப்பிட்டுள்ளபடி இந்த புதிய 'கூல்' வாய்ப்பின் கீழ், செல்லுபடியாகும் தேதி வரை ஒவ்வொரு நாளும் வரம்பற்ற தரவுகளை அனுபவிக்கலாம். இதன் அர்த்தம் டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது. மறுகையில் குரல் அழைப்பும் வரம்புகளின்றி கிடைக்கும்.

நாடு முழுவதிலும் கிடைக்கின்றது

நாடு முழுவதிலும் கிடைக்கின்றது

இந்த சலுகையின் கீழ் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், தனிப்பட்ட ரிங்கிங் பேக் டோனுக்கான (Personalised Ring Back Tone - PRBT) அணுகலையும் பெறுவார்கள். கூடுதல் சிறப்பம்சமாக இந்த "கூல்" வாய்ப்பானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து வட்டங்களிலும், நாடு முழுவதிலும் கிடைக்கின்றது.

குரல் அழைப்புகள் மற்றும் தரவு

குரல் அழைப்புகள் மற்றும் தரவு

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ.1,595/- என்கிற வரம்பற்ற திட்டமானது அதன் குரல் அழைப்புகள் மற்றும் தரவுகளை வரம்பின்றி மொத்தம் ஒருமாத காலத்திற்கு அளிக்கிறது. அதே நேரத்தில் இதன் எஸ்எம்எஸ் சலுகையில் மட்டும் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்கப்படும்

செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்கப்படும்

உத்தியோகபூர்வ பிஎஸ்என்எல் வலைத்தளத்தின்படி, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1595/- திட்டம் கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டத்தின்கீழ் இணையும் புதிய வாடிக்கையாளராக இருந்தால் ரூ.500/- என்கிற செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்கப்படும்.

எந்தவொரு எல்லையும் கிடையாது

எந்தவொரு எல்லையும் கிடையாது

இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசனினால், இது வரம்பற்ற ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இங்கு இரண்டு நன்மைகள் உள்ளன: முதலாவதாக, அழைப்புகள் உண்மையிலேயே வரம்பற்றவை, எந்தவொரு எல்லையும் கிடையாது.

வேக கட்டுப்பாடு இல்லாத தரவு நன்மை

வேக கட்டுப்பாடு இல்லாத தரவு நன்மை

இரண்டாவதாக, பயனர் ஒரு லேண்ட்லைன் எண்ணுக்கு கூட குரல் அழைப்புகளை நிகழ்த்தலாம். உடன் எந்தவொரு வரம்பும் மற்றும் வேக கட்டுப்பாடும் இல்லாத தரவு நன்மையையும் அனுபவிக்கலாம். இதுபோல் எந்த வரம்பும் இல்லாமல் காம்போ அழைப்புகளை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல் தான்.

250 எஸ்எம்எஸ்

250 எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த திட்டம் ஒரு பில்லிங் சுழற்சியின்கீழ் 250 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் பல பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா, டெலினார் போன்ற நிறுவனங்களின் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Maximum Prepaid Plan of Rs 999 Introduced, Offers 1GB Data Per Day and Unlimited Voice for One Year. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X