வாய் உள்ள புள்ள பொழச்சிக்கும்! ஒரே ஒரு கோரிக்கை.. அரசாங்கத்தை வைத்தே அம்பானிக்கு ஸ்கெட்ச் போட்ட BSNL!

|

இதற்கு மேலேயும் கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாய் பேசாமல் இருந்தால் வேலைக்கு ஆகாது என்கிற எண்ணம் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு வந்துவிட்டது போலும்!

கோரிக்கை என்கிற பெயரில், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்திற்கு எதிரான ஒரு வேலையை BSNL பார்த்துள்ளது!

அதென்ன வேலை? BSNL-ன் கோரிக்கை தான் என்ன? அந்த கோரிக்கைக்கு பின்னால் உள்ள சூழ்ச்சி என்ன? இதோ விவரங்கள்:

இது கோரிக்கை அல்ல.. Jio-விற்கான கொக்கி!

இது கோரிக்கை அல்ல.. Jio-விற்கான கொக்கி!

"4ஜி சேவைக்கே வழி இல்லை.. இதில் எங்கிருந்து 5ஜி சேவைகளை வழங்க போகிறது?" என்கிற விமர்சனங்களையும், கேலிப்பேச்சுகளையும் சரி செய்யும் நோக்கத்தின் கீழ் - அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான - பிஎஸ்என்எல் கடுமையாக பணியாற்றி வருகிறது.

அதனொரு பகுதியாக, பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது இந்திய அரசிடம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதை கோரிக்கை என்று கூறுவதை விட ரிலையன்ஸ் ஜியோவை சிக்க வைக்கும் ஒரு கொக்கி என்றே கூறலாம்!

அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!அடிச்சான் பாரு.. இதுதான் NOKIA-வின் உண்மையான கம்பேக்.. ஒரே ஒரு அறிவிப்பு.. ஷாக் ஆகிப்போன சீன கம்பெனிகள்!

அப்படி என்ன கோரிக்கை?

அப்படி என்ன கோரிக்கை?

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 5ஜி சேவைகளை வெளியிட கூடுதல் ஸ்பெக்ட்ரம் தேவை என்று இந்திய அரசிடம் கேட்டுள்ளது. அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனமானது 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையிலான ஸ்பெக்ட்ரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய அரசாங்கம், ஏற்கனவே இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கென 5G அலைக்கற்றையை ஒதுக்கியுள்ளது. இருப்பினும், இந்நிறுவனம் தனது சேவையின் கீழான 5G அறிமுகத்திற்காக மேலதிக அதிர்வெண்கள் வேண்டும் என்று விரும்புகிறது!

இதெப்படி ஜியோவிற்கான ஒரு ஸ்கெட்ச் ஆகும்?

இதெப்படி ஜியோவிற்கான ஒரு ஸ்கெட்ச் ஆகும்?

உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம், தற்போது வரையிலாக ​​ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமே 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையிலான 10 மெகா ஹெர்ட்ஸ் பான்-இந்தியா ஸ்பெக்ட்ரமை தன் வசம் கொண்டுள்ளது.

தன்னிடம் மட்டுமே இருக்கும் 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை வைத்து தான் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ "தண்ணீ காட்ட" உள்ளது!

அதே 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையிலான ஸ்பெக்ட்ரம் ஆனது பிஎஸ்என்எல் நிறுவனத்திடமும் இருந்தால் கண்டிப்பாக அது அம்பானிக்கான ஒரு தலைவலியாக மாறும்!

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

பத்தல.. பத்தல!

பத்தல.. பத்தல!

பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ஏற்கனவே 600 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 10 மெகா ஹெர்ட்ஸ் இருந்தாலும் கூட, அது 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் 10 மெகா ஹெர்ட்ஸ் பேர்டு ஸ்பெக்ட்ரத்தை கோரியுள்ளது.

இதனுடன், 3300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் கூடுதலாக 30 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 400 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையையும் கேட்டுள்ளது.

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், 5G வெளியீட்டிற்காக ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையை இரட்டிப்பாக்குமாறு பிஎஸ்என்எல் நிறுவனம், அரசாங்கத்திடம் கேட்டுள்ளது!

5ஜி சேவைக்காக BSNL க்கு எவ்வளவு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது?

5ஜி சேவைக்காக BSNL க்கு எவ்வளவு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது?

ஒரு பிடிஐ (PTI) அறிக்கையின்படி, இந்திய அரசாங்கம் ஏற்கனவே 600 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 10 மெகா ஹெர்ட்ஸ் பேர்டு ஸ்பெக்ட்ரம், 3300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 40 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 400 மெகா ஹெர்ட்ஸ் ஆகியவற்றை BSNL-க்காக ஒதுக்கியுள்ளது.

இருப்பினும், 5G வெளியீட்டிற்கு இது போதுமானதாக இருக்காது என்று BSNL நினைக்கிறது. எனவே, அதிக அலைவரிசைகளை கேட்டுள்ளது.

BSNL-க்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைக்கற்றையானது பான் இந்தியா அடிப்படையிலான 5ஜி சேவைகளை வழங்கும் நோக்கத்தின் கீழ் இந்த டெலிகாம் நிறுவனத்தால் பயன்படுத்தப்பட உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?

5ஜி ஒருபக்கம் இருக்கட்டும்.. 4ஜி எப்போ வரும்?

5ஜி ஒருபக்கம் இருக்கட்டும்.. 4ஜி எப்போ வரும்?

5ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான கோரிக்கைகள் ஒருபக்கம் இருக்க, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி அறிமுகத்திற்கான பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதுவரை நிகழ்ந்துள்ள முன்னேற்றங்களை வைத்து பார்க்கும் போது, BSNL நிறுவனத்தின் 4ஜி சேவைகள் ஆனது வருகிற 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கலாம். அதன் பின்னரே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அறிமுகமாகும்!

Best Mobiles in India

English summary
BSNL Master Plan For 5G Rollout Asks Govt To Give 700 MHz Spectrum To Compete With Jio

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X