Home
News

ஜூலை 30 தான் கடைசி.. அதுக்கு அப்புறம்? BSNL-ன் அதிரடி அறிவிப்பு.. யார் எல்லாம் சிக்குவார்கள்?

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டரான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், வருகிற 2023 ஜூலை 30 ஆம் தேதியை "கெடு நாளாக" நிர்ணயம் செய்து, ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதென்ன நடவடிக்கை? அதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன? இதோ விவரங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் தனது பிராட்பேண்ட் (Broadband) சேவைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஃபைபர் இண்டர்நெட் சேவை வழங்குநராக (Fiber Internet Service Provider) உள்ள பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் நுழைவு நிலை பிராட்பேண்ட் திட்டமான ரூ.329-ஐ விரைவில் நீக்கவுள்ளது.

ஜூலை 30 தான் கடைசி.. அதுக்கு அப்புறம்? BSNL-ன் அதிரடி அறிவிப்பு!

டெலிகாம் டால்க் வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, பிஎஸ்என்எல்-ன் ரூ.329 திட்டமானது இம்மாத இறுதிக்குள் பல மாநிலங்களில் இருந்து அகற்றப்பட உள்ளது. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் வருகிற ஜூலை 30, 2023 க்கு பின்னர் இந்த என்ட்ரி-லெவல் பிராட்பிராண்ட் ரீசார்ஜ் ஆனது எல்லா மாநிலங்களிலும் கிடைக்காது.

இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? என்று மேலோட்டமாக யோசித்தால்.. இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு வழக்கமான நடவடிக்கை தானே.. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட திட்டம் அகற்றப்படுவது ஒன்றும் புதிது இல்லையே.. என்றே கேட்க தோன்றும்.

ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்தால் மட்டுமே இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள பிஎஸ்என்எல்-ன் வியாபார தந்திரத்தை பற்றி நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. ரூ.329 திட்டம் நீக்கப்படுவதால் இரண்டு விஷயங்கள் தானாக நடக்கும். ஒன்று - பட்ஜெட் விலை திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வழக்கம் கொண்ட பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்கள் சற்றே விலை அதிகமுள்ள திட்டங்களை ரீசார்ஜ் செய்ய தொடங்குவார்கள்.

இரண்டாவது - ஜூலை 30க்கு பிறகு இந்த திட்டம் கிடைக்காது என்பதால், புதிய பிஎஸ்என்எல் கனெக்ஷனை வாங்க விரும்பும் பயனர்கள் அவசரப்படுத்தப்படுவார்கள். இந்த இரண்டு விஷயங்களுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் "மார்க்கெட்டிங் தந்திரங்களாக" (Marketing tactics) இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரூ.329 பிராட்பேண்ட் திட்டமானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலிருந்தும் அகற்றப்படப் போவதில்லை. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இது பீகார் மற்றும் ஜார்கண்ட் (Bihar and Jharkhand), அஸ்ஸாம் (Assam), ஆந்திரப் பிரதேசம் (Andhra Prades) மற்றும் சில வட்டங்களில் இருந்து அகற்றப்படலாம்.

பிஎஸ்என்எல் ரூ.329 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது 20எம்பிபிஎஸ் (20Mbps) என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் 1000ஜிபி அல்லது 1டிபி டேட்டாவை வழங்குகிறது. 1000ஜிபி என்கிற டேட்டா லிமிட் தீர்ந்ததும் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 4எம்பிபிஎஸ் ஆக குறையும்.

டேட்டா நன்மையுடன் சேர்ந்து இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் (Unlimited Voice Calls) கிடைக்கும். கூடவே இலவச லேண்ட்லைன் கனெக்ஷனும் (Free landline connection) கிடைக்கும். இருப்பினும் லேண்ட்லைன் இணைப்புக்கான கருவியை நீங்கள் தனியாக வாங்க வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Marketing Tactics Behind Removing Its Entry Level Broadband Plan Rs 329 From July 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X