ஃபைபர் பிராட்பேண்ட் விலை மற்றும் விவரங்களை அறிவித்தது பிஎஸ்என்எல் நிறுவனம்.!
இப்போது அறிவித்துள்ள இரண்டு திட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது, குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகையை அறிவித்தது. குறிப்பாக இந்த திட்டம் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும். அதன்படி விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது பிஎஸ்என்எல்.

பிஸ்எஸ்என்எல்
பிஸ்எஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.777 திட்டம் பொறுத்தவரை 30நாட்களுக்கு 500ஜிபி டேட்டா 50எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1277 திட்டத்தில் பயனர்களுக்கு 750ஜிபி டேட்டா 10எம்பிபிஎஸ் வேகத்தில் 30 நாட்களுக்கு
வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு
பின்பு ரூ.777 சலுகையை வருடத்திற்கு ரூ.8,547 விலையிலும், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.16,317 விலையிலும் வழங்கப்படுகிறது. மேலும் இதே சலுகையை மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த விரும்புவோர் ரூ.23,310 செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ரூ.1,277 சலுகையை ஒரு வருடத்திற்கு பயன்படுத்த விரும்புவோர் ரூ.13,047, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.26,817 மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.38,310 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டேட்டா வேகம்
இப்போது அறிவித்துள்ள இரண்டு திட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். குறிப்பாக புதிய பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும், ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவோர் இரண்டு சலுகைகளையும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரீசார்ஜ்
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 17 நாட்களுக்கு 34ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் பிஎஸ்என்எல் அறிவித்த சலுகைகளைப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications