பிஎஸ்என்எல் ரூ.399 மற்றும் ரூ.799/-ல் திருத்தம்; தனியார் நிறுவனங்களுக்கு நெருக்கடி.!
இந்த நன்மைக்கு எந்த விதமான தினசரி அல்லது மாதாந்திர வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், இப்போது அதன் போஸ்ட்பெயிட் திட்டத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது போல் தெரிகிறது. ரூ. 399/- என்கிற பட்ஜெட் விலை திட்டத்தின் அறிமுகத்தை தொடர்ந்து, இப்போது அந்த திட்டத்தில் ஒரு திருத்தத்தை நிகழ்த்தியுள்ளது.
நுழைவு நிலை திட்டமான ரூ.399/-ல் மட்டுமின்றி, நிறுவனத்தின் பிரீமியம் திட்டமான ரூ.799/-லும் சிறிய திருத்தும் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.399/- மற்றும் ரூ.799/- திட்டத்தின் நன்மைகளில் வெளி செல்லும் ரோமிங் அழைப்பு நன்மை இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நன்மைக்கு எந்த விதமான தினசரி அல்லது மாதாந்திர வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்த இரண்டு திட்டங்களும் வரம்பற்ற ஆன்-நெட் மற்றும் ஆப்-நெட் அழைப்புகளை அணுக அனுமதிக்கும் என்று அர்த்தம்.
இந்த சமீபத்திய திருத்தத்தின் வழியாக பிஎஸ்என்எல் நிறுவனமானது, இதர தனியார் டெலிகாம் நிறுவனங்களுடனான - குரல் அழைப்பு நன்மை அடிப்படையிலான - போட்டியை அதிகரித்துள்ளது என்பதும், ரூ.799/- திட்டமானது, பிஎஸ்என்எல் லேண்ட்லைன் எண்களுக்கு வரம்பற்ற அழைப்பை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.399/- ஆனது 30ஜிபி அளவிலான டேட்டாவையும், மறுகையில் உள்ள ரூ,799/- ஆனது 60ஜிபி அளவிலான டேட்டாவையும் கொடுக்கிறது. துரதிருஷ்டவசமாக, இந்த இரண்டு திட்டங்களும் எந்தவொரு எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்கவில்லை. இதர தனியார் நிறுவனங்களின் போஸ்ட்பெயிட் திட்டங்களில் 100 எஸ்எம்எஸ்/நாள் என்கிற நன்மை இருப்பதும், அது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான ஒரு பின்னடைவு என்பதும் வெளிப்படை.

பிஎஸ்என்எல் அதன் ரூ.1,125/- முதல் தொடங்கும் திட்டங்களில் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. ஆனால், மொத்த பில்லிங் சுழற்சியின் கீழ் வெறும் 250 எஸ்எம்எஸ் மட்டுமே வழங்குகிறது.


Click it and Unblock the Notifications