பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கும் தீபாவளி சிறப்பு சலுகை.! விலை என்ன தெரியுமா?
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு தங்கள் பயனர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது.
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு தங்கள் பயனர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகை பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

தீபாவளி சலுகை
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கென்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய தீபாவளி தமாகா ஆஃபர் என்ற பெயரில் ரூ.1,699 மற்றும் ரூ.2,099 என்ற விலையில் இரண்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.1,699
தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.1,699 சலுகை திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா 4ஜி தரவரிசையில் வழங்கப்படுகின்றது. தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்தியேக ரிங்டோன் பேக் போன்ற அனைத்துச் சேவைகளும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.2,099
தீபாவளி தமாகா ஆஃபர் ரூ.2,099 சலுகை திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்தியேக ரிங்டோன் பேக், தினமும் 4 ஜி.பி. டேட்டா உள்ளிட்ட சேவைகள் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல்
இந்த புதிய சலுகை இந்தியா முழுக்க உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். பயனர்களுக்குப் பொருந்தும். இருப்பினும் ஜியோ நிறுவனம் போல தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் 100% கேஷ் பேக் சலுகைகளை வழங்கியிருந்தால் பி.எஸ்.என்.எல். பயனர்களுக்குத் தீபாவளி மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.


Click it and Unblock the Notifications