BSNL அதிரடி.. வருகிறது 4G.. கம்மி பட்ஜெட்டில் 84 நாள் வேலிடிட்டி.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்..
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனால் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி மற்றும் 5ஜி சேவையைக் கூட வழங்கிவிட்டன.
பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை. ஆனால் இந்நிறுவனம் கூடிய விரைவில் 4ஜி (4G) சேவையை வழங்க உள்ளது. அதாவது நாட்டில் உள்ள 2ஜி மற்றும் 3ஜி டவர்கள் அனைத்து தற்போதும் 4ஜி டவர்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர புதிய 4ஜி டவர்களும் நிறுவப்பட்டுள்ளன.

எனவே வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்
பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 499 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 150ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் நிறுவனம் வழங்கும் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக மாற்றப்படும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், கேமிங் சேவைகள் மற்றும் பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 599 plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் அகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளது.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இதுதவிர ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 769 plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கிறது.
மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர BSNL ட்யூன்ஸ், மொபைல் கேம் சேவை, லோக்துன் (Lokdhun) மற்றும் ஜிங் ( Zing) உள்ளிட்ட பல சலுகைகள் இதில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








