இலவச சிம், உடன் திட்டங்களின் மீது 60% ஆபர்: பிஎஸ்என்எல் அதிரடி.!
அதனை தொடர்ந்து இப்போது பிஎஸ்என்எல் அதன் பழைய பாணி ஒன்றை கையில் எடுத்துதுள்ளது.
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆணையு பார்தி ஏர்டெல், ஐடியா, வோடாபோனை விட 50% கூடுதல் டேட்டாவை வழங்கும் நோக்கத்தின்கீழ் அதன் ரூ.399/-ஐ சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது 2018 மார்ச் 1 முதல் அமலுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து இப்போது பிஎஸ்என்எல் அதன் பழைய பாணி ஒன்றை கையில் எடுத்துதுள்ளது. நிறுவனத்தின் லூட் லோ ஆபர் என்று அழைக்கப்படும் இந்த வாய்ப்பானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் மீது ஒரு நம்பமுடியாத 60% சலுகையை வழங்குகிறது.

12 மாதம் - 60% தள்ளுபடி
வெளியான அறிக்கையின்படி இந்த லூட் லோ வாய்ப்பானது மார்ச் 6, 2018 முதல் தொடங்கி மார்ச் 31, 2018 வரை மட்டுமே அணுக கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு, ரூ.1525/- மீதான 12 மாத கால அட்வான்ஸ் ரெண்டல் வாய்ப்பை பெற ஒரு வாடிக்கையாளர் விரும்பினால் 60% தள்ளுபடி கிடைக்கும், ஒருவேளை ஆறு மாதங்களுக்கு விரும்பினால் 45% தள்ளுபடியும் மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையெனில் 30% தள்ளுபடியும் கிடைக்கும்.

இதே முறையிலான தள்ளுபடிகளை பெற முடியும்.!
நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.1525/- ஆனது எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பு இல்லாத தரவு ஆகியவைகளை வழங்குகிறது. ரூ.1525/- போன்றே வரம்பற்ற நன்மைகளை வழங்கும் ரூ.1125, ரூ.799, ரூ.725, ரூ.525, ரூ.325/- மற்றும் ரூ.225/- ஆகிய திட்டங்களிலும் இதே முறையிலான தள்ளுபடிகளை பெற முடியும்.

அட்வான்ஸ்டு ரெண்டல் விருப்பங்கள் கீழ் மட்டுமே பெற முடியும்.!
இந்த வாய்ப்பின் கீழ் பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் திட்டங்களின் மீது 60% தள்ளுபடி கிடைக்கும். உடன் 100% இலவச செயல்படுத்தல் கட்டணங்கள் மற்றும் ஒரு இலவச சிம் அட்டையும் கிடைக்கும். எனினும், இந்த வாய்ப்பை 12 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் போன்ற அட்வான்ஸ்டு ரெண்டல் விருப்பங்கள் கீழ் மட்டுமே பெற முடியும்.

கவர்ச்சிகரமான திட்டங்களை சமாளிக்கும் வண்ணம்.!
இதே மாதிரியான பிஎஸ்என்எல் லூட் லோ வாய்ப்பானது கடந்த நவம்பர் 2017-ல் கிடைத்ததும், சமீப காலமாக தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை சமாளிக்கும் வண்ணம் மீண்டும் இந்த பாணி கையில் எடுக்கப்பட்டுள்ளதும் வெளிப்படை.

சிறந்த பகுதி என்னவென்றால்.?
இந்த வாய்ப்பின் சிறந்த பகுதி என்னவென்றால் இது ஏற்கனவே இருக்கும் பிஎன்என்எல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், அதே சமயம் பான்-இந்தியா அடிப்படையிலான பயணர்களுக்கும் பொருந்தும்.

30ஜிபி
முன்னர் அறிமுகமான பிஎஸ்என்எல் ரூ.399/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், இது எந்த வரம்பும் இல்லாத அழைப்பு நன்மைகளுடன் சேர்த்து அதன் பில்லிங் சுழற்சி காலத்திற்கு மொத்தம் 30ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது.

50% அதிகமாகும்.!
துரதிருஷ்டவசமாக, இந்தத் திட்டம் எஸ்எம்எஸ் பலன்களை வழங்கவில்லை, இதுவொரு பின்னடைவாக இருப்பினும் கூட இந்த ரூ.399 திட்டமானது இதர தனியார் தொலைதொடர்புகள் வழங்கும் டேட்டா நன்மையானது 50% அதிகமாகும்.

ஏர்டெல்
இந்த திட்டமானது இது எந்த ரோமிங் அழைப்பு நன்மைகளையும் வழங்காது என்பது மற்றொரு பின்னடைவு ஆகும். மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் ரூ.399/- ஆனது மொத்தம் 20 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் பில்லிங் சுழற்சி காலம் வரை ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

வோடபோன்
வோடபோன் இந்தியாவின் ரூ.399/- ஆனது ஒரு ரெட் பேஸிக் திட்டமாகும். இது வெளிச்செல்லும் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் மொத்தம் 20 ஜிபி அளவிலான தரவு ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ஐடியா
ஐடியா செல்லுலாரின் ரூ.389/- என்கிற நிர்வாணா பட்ஜெட் திட்டமானது - சமீபத்தில் திருத்தப்பட்டு - தற்போது மொத்தம் 20 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம்.!?
பிஎஸ்என்எல் ரூ.399/- திட்டத்துடன் குறைந்தபட்சம் எஸ்எம்எஸ் நன்மைகளாவது சேர்க்கப்பட்டால் இதர நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்குமொரு முதன்மை திட்டமான இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பல வகையான டெலிகாம் அப்டேட்ஸ்களுக் தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

மூலம்: டெலிகாம்டால்க்.இன்ஃபோ


Click it and Unblock the Notifications