Home
News

பைசா காசு தேவையில்லை.. இலவச BSNL Live Tv சேவை பெரும் முதல் மாநிலம்.. கேபிள்-டிவி கதை முடிந்தது..முழுசா ஃப்ரீ..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் அதன் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை இந்தியாவில் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. இப்போதே மக்கள் பல பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் நன்மைகளை பார்த்து, கூட்டம் கூட்டமாக பிஎஸ்என்எல் பக்கம் மாறி வருகின்றனர். இதற்கு மத்தியில் மக்களை அடுத்த கட்ட சந்தோஷத்திற்கு அழைத்து செல்லும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் புதிய பிஎஸ்என்எல் லைவ் டிவி (BSNL Live Tv) சேவையை அறிமுகம் செய்துள்ளது.

BSNL இப்போது அதன் லைவ் டிவி சேனல் சேவைகளை இந்தியாவில் சோதனை செய்ய துவங்கியுள்ளது. பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவையின் சோதனை சேவையை நிறுவனம் முதற்கட்டமாக மத்தியப் பிரதேசத்தில் துவங்கியுள்ளது. BSNL FTTH மூலம் வயர்லெஸ் லைவ் டிவி சேவைகளை நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது, ​​சோதனைக் கட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

பைசா காசு தேவையில்லை.. இலவச BSNL Live Tv சேவை பெரும் முதல் மாநிலம்..

பிஎஸ்என்எல் லைவ் டிவி (BSNL Live Tv):
இந்தியாவில் இதுபோன்ற முதல் சேவை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சோதனை மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப்படுகிறது. BSNL லைவ் டிவி சேவைகள், கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் புதிய ஆப் மூலம் கிடைக்கும் என்று BSNL நிறுவனம் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இங்கே.

பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவை BSNL FTTH இணைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வெர்ஷன் 10 அல்லது அதற்கு மேல் உள்ள டிவிகளில் பயன்படுத்த கிடைக்கும். இந்த இலவச லைவ் டிவி சேனல் சேவையின் கீழ் சன்டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி, போன்ற பல டிவி சேனல்களின் அணுகல் கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது. BSNL FTTH இணைப்பில் WiFi ஐப் பயன்படுத்தி உள்ளடக்கங்களை அணுகலாம்.
.
பிஎஸ்என்எல் லைவ் டிவி சேவையை எவ்வாறு பயன்படுத்துவது?
- Google Play Store இலிருந்து https://play.google.com/store/apps/details?id=com.streaming.bsnllivetv இல் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்
- BSNL Live TV ஆப்ஸை இன்ஸ்டால் செய்யவும்.
- பயனர்கள் 9424700333 என்ற மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.
- மிஸ்டு கால் மூலம் நுகர்வோரின் எண்ணைப் பதிவு செய்வும்.
- பிறகு டிவியில் பிஎஸ்என்எல் லைவ் டிவி நிறுவப்படும்.

இந்த சோதனை கட்டத்தில், நுகர்வோர் மீது கூடுதல் டேட்டா கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படாது. மேலும் அவர்களின் FTTH திட்டத்தில் இருந்து எந்த டேட்டாவும் கழிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், BSNL முன்னதாக தனது இணைய நெறிமுறை தொலைக்காட்சி (IPTV) சேவையை ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலம் அறிமுகப்படுத்தியது. அதன் விலை மாதம் ரூ. 130 மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை பாரம்பரிய செட்-டாப் பாக்ஸின் தேவையை நீக்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Live TV is currently under testing and available to BSNL FTTH subscribers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X