இறங்கி அடிக்கும் BSNL.. ஏப்ரல் முதல் 4G சேவை.. தமிழ்நாடு கஸ்டமர்கள் சிம் கார்ட மாத்துங்க!
எப்பா சாமி வந்துட்டியா என்று நிம்மதி பெருமூச்சு விடுமளவுக்கு பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களை குஷிப்படுத்தும் விதமாக அதன் 4ஜி சேவை (4G service) வரும் ஏப்ரலில் தொடங்கயிருக்கிறது. முதலில் எந்தெந்த மாவட்டங்களில் கிடைக்கும்? கிராமங்களில் சேவை கிடைக்குமா? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவை 4ஜி சேவைக்கு பிறகு 5ஜி சேவைகளை அவற்றின் கஸ்டமர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டன. அதிலும், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைகளை முழுவீச்சில் வழங்க தொடங்கிவிட்டன.

இதில் ஜியோ நிறுவனம், 90 சதவீதத்துக்கும் அதிகமான நகரங்களில் 5ஜி சேவையை (5G service) கொடுத்து வருகிறது. ஆகவே, கிட்டத்தட்ட 5ஜி சேவைகள் கஸ்டமர்களிடையே பரவலாகிவிட்ட வேளையில், அதற்கான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் மீது ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் கவனம் சென்று விட்டது.
இந்த 2024ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் 5ஜி திட்டங்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் கஸ்டமர்களை அதிவிரைவாக 4ஜி சேவைக்கு மாற்றும் பணியில் மும்முரமாக களமிறங்கிவிட்டது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து 4ஜி சேவைகள் வழங்கப்படலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை, பிஎஸ்என்எல், தமிழ்நாடு முதன்மை பொது மேலாளர் டி.தமிழ்மணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்குவதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் வரும் மார்ச் மாதத்தில் முடிய வாய்ப்புள்ளது. அதன்பிறகு கஸ்டமர்களுக்கு 4ஜி சேவை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சேலம், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில் ஆகியவற்றில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் முழுவதும் தயாராகிவிட்டன. அதேபோல முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்ட 4ஜி டவர்களில் 5ஜி சேவைக்கான தொழில்நுட்பங்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, மேற்கூறிய நகரங்களில் முதலில் சேவைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 4ஜி சேவைகள்: மேற்கூறிய நகரங்கள் மட்டுமல்லாமல், ஈரோடு, திண்டுக்கல் போன்ற மலைத்தொடர்கள் நிறைந்த மாவட்டங்களுக்கும் 4ஜி சேவையில் முன்னுரிமை கொடுக்கப்பட இருக்கிறது. சொல்லப்போனால், எந்தவொரு டெலிகாம் சேவைகளும் கிடைக்காமல் இருக்கும் 24 மாவட்டங்களை சேர்ந்த 218 கிராமங்களிலும் இந்த சேவைகள் வழங்கப்பட இருக்கிறது.
அதேபோல சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு போன்ற போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள 8 மலை கிராமங்கள் மற்றும் 185 வருவாய் கிராமங்களிலும் 4ஜி சேவைகள் கொடுக்கப்பட இருக்கின்றன. மேலும் கன்னியாகுமரி, உடுமலைபேட்டை போன்ற பகுதிகளில் இருக்கும் மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க வனத்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த அனுமதி கோரப்பட்ட பகுதிகளை தவித மற்ற அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான பணிகள் முடிவடைய போகின்றன. ஆகவே, ஏப்ரலில் இருந்து 4ஜி சேவைகள் படிப்படியாக கொடுக்கப்பட இருப்பது உறுதியாகிவிட்டது. இதனால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தங்களது 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டுகளை 4ஜி சிம் கார்டாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டுகள் 4ஜி சிம் கார்டுகளாக மாற்ற விரும்பும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தங்களது மாவட்டங்களில் அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்களை அனுகலாம். அதேபோல பிஎஸ்என்எல் நிறுவனம் நடத்தும் சிம் கார்டு மேலாக்களிலும் 4ஜி சிம் கார்டுகளை மாற்றி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








