பிஎஸ்என்எல் வெளியிட்ட 'வீடியோ டெலிபோனி' சேவை!

Written By:

நாடு முழுவதும் BSNL நிறுவனம் வீடியோ டெலிபோனி என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் தற்பொழுதும், பிற இடங்களில் ஏற்கனவே இந்த சேவையானது செயல்பட்டு வருகிறது.

பிஎஸ்என்எல் வெளியிட்ட 'வீடியோ டெலிபோனி' சேவை!

BSNL ஆனது கிளிக் டெலிகாம் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த வீடியோ டெலிபோனி சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை இந்த சேவையை அறிமுப்படுத்தி, பின்னர் பேசிய அமைச்சர் கபில் சிபல் "பிரோட்பேண்ட் வியாபாரத்தை இந்த வீடியோ டெலிபோனி சேவையின் மூலமாக தொடங்கியுள்ளோம். இதனால் BSNL நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும். அனைவருக்கும் பயனுள்ளதாக இது இருக்கும்" என்றார்.

இந்த சேவையின் மூலமாக மற்றோருவருடன் பேசுவதற்கு 60 வினாடிகளுக்கு ரூ.2.50 செலுத்தவேண்டும். BSNL அன்லிமிடெட் வசதியும் தருகிறது ஆனால் அந்த சேவைபெற, 30 நாட்களுக்கு ரூ.2,200 செலுத்தவேண்டும்.

மேலும் பல வேறுபட்ட கட்டண விகிதங்களிலும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot