வீடியோகால் வசதியினை வழங்கும் பிஎஸ்என்எல்!

Posted By: Staff
வீடியோகால் வசதியினை வழங்கும் பிஎஸ்என்எல்!

லேண்டுலைனில் வீடியோகால் வசதியினை வழங்குகிறது தொலை தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல்.

எஸ்ஐஎஸ் இன்ஃபோசிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் லேண்டுலைன் சேவையில் புதிய வீடியோகால் வசதியினை வழங்குகிறது.

இதன் மூலம் லேண்டுலைன் தொலைபேசியில், மொபைல்களில் இருப்பது போல வீடியோகால் வசதியினை பெறலாம். ஆனால் தற்பொழுது இந்த வசதி பொது தொலைப்பேசிகளில் மட்டும் வழங்கப்படுவதாக தெரிகிறது.

லேண்டுலைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. முக்கியமாக பிராண்டு பேண்டு சேவைக்காக தான் நிறைய பேர் லேண்டுலைன் வசதியினை அனுகுவதாகவும் கூட சில புள்ளிவிவரங்கள் கூறப்பட்டது.

இதனால் சமீபத்தில் கூட லேண்டுலைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதிகளை வழங்கும் அடிப்படையிலும் புதிய வசதிகளை லேண்டுலைன் சேவையில் வழங்க இருப்பதாக கடந்த ஆகஸ்டு 13ம் தேதி நமது தமிழ் கிஸ்பாட்டில் செய்தி வெளியாகி இருந்தது.

இப்படி லேண்டுலைன் சேவையில் வீடியோகால் வழங்கும் வசதி கூடிய விரைவில் அறிமுகம் செய்வதாகவும் கூறப்பட்டது. வீடியோ கால் போன்ற நவீன வசதிகளை லேண்டுலைன் தொலைபேசிகளில் வழங்க ரூ. 400 கோடியை முதலீடு செய்ய பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிய வந்தது.

இந்த வீடியோகால் வசதியினை இன்று பிஎஸ்என்எல் நிறுவனம், எஸ்ஐஎஸ் இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறது. இதனால் வீடியோகால் வசதியினை பொது தொலைபேசி அலுவலகங்களிலும், இன்டர்நெட் (ஐபி) சேவையினை வழங்கும் மற்ற தொலைபேசிகளிலும் பெறலாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. உபாத்தியாய் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்