Home
News

அம்பானி அறிவிப்பிக்குபின் : வியக்கவைக்கும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!

முகேஷ் அம்பானி நேற்று நடைபெற்ற நகழ்ச்சியில் ஜிகாபைபர் சேவையை அறிமுகம் செய்தார், அத்துடன் கூடுதலாக யாரும் எதிர்பார்த்திடாத அறிவிப்பையும் முகேஷ் அம்பானி வெளியிட்டிருக்கிறார். 4K LED டிவி மற்றும் 4K செட்டப் பாக்ஸை இலவசமாக வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

340 மில்லியன்

340 மில்லியன்

ரிலையன்ஸ் ஜியோ, இன்று தனது மூன்றாவது ஆண்டில் கால் எடுத்து வைக்கிறது. இதுவரை ஜியோ நிறுவனம் சுமார் 340 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்க்கில் சேர்த்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இத்துடன் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட சுமார் 10 மில்லியன் புதிய பயனர்களையும் தனது நெட்வொர்க்கில் சேர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

 பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

இந்நிலையில் மற்ற நிறுவனங்களின் திட்டங்கள் கிடப்பில் போடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பானி அறிவிப்புக்கு பின்பு அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அசைந்த கொடுப்பது போல தெரியவில்லை.

 பிராட்பேண்ட் மற்றும் மொபைல் நெட்வொர்க்

பிராட்பேண்ட் மற்றும் மொபைல் நெட்வொர்க்

அதன்படி ஜியோ நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1,199/- மதிப்புள்ள (Family Combo Plan) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் மற்றும் மொபைல் நெட்வொர்க் என இரண்டு சேவைகளையும் வழங்கும் ஒரு திட்டமாகும்.

பிஎஸ்என்எல் மட்டுமே அத்தகைய சேவையை வழங்குகிறது

பிஎஸ்என்எல் மட்டுமே அத்தகைய சேவையை வழங்குகிறது

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த திட்டம் இரட்டை நன்மைகளை வழங்கும் ஒரு திட்டமாகும், இது ரிலையன்ஸ் ஜியோவிடம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வோடபோன் நிறுவனம் பிரிட்டனில வழங்கும் ஒரு திட்டத்தில் மூன்று சேவைகளை வழங்குகிறது. அதன்படி மொபைல் நெட்வொர்க், பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் சேவைகளை வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் பிஎஸ்என்எல் மட்டுமே அத்தகைய சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.1,199திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

பிஎஸ்என்எல் ரூ.1,199திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ரூ.1,199 திட்டத்திற்கு பிபிஜி காம்போ யுஎல்டி ஃபேமிலி பிளான் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 10எம்பிபிஎஸ் வேகத்திலான 30ஜிபி என்கிற மாதாந்திர தரவு வரம்பினை கொண்டுள்ளது. ஒருவேளை 30ஜிபி என்கிர வரம்பை தாண்டனால் பதிவிறக்க வேகம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத், அந்தமான் மற்றும் நிக்கோபர்

குஜராத், அந்தமான் மற்றும் நிக்கோபர்

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டம் குஜராத், அந்தமான் மற்றும் நிக்கோபர் போன்ற பகுதிகளை தவிர இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டதில் வரம்பற்ற
லேண்ட்லைன் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது பிஎஸ்என்எல்.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் மூன்று மொபைல்களை இணைக்கலாம்,இவை அனைத்தும் அனைத்து நெட்வொர்க் உடனான இலவச வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் மூன்று சிம்களுக்கு 40ஜிபிபிஎஸ் வேகத்திலான 1ஜிபி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியப்பை ஏற்படுத்தியுள்ளது

வியப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் மூன்று சிம்களில் ஒன்றின் வழியாக இலவச ஆன்லைன் டிவிக்கான அணுகலும் கிடைக்கும், இந்த திட்டங்கள் அனைத்தும் தனித்தனியாக தேர்வு செய்தால் ரூ.2000-க்கு அதிகமாக கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1199-க்கு வழங்கி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Launches ULD Family 1199 Plan at Rs. 1,999 with Broadband: Unlimited Data, Voice Calling and Benefits : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X