BSNL: கம்மி காசு அதிக வேலிடிட்டி, இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம்! இதன் நன்மை என்ன?
பி.எஸ்.என்.எல் நிறுவனம் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பி.எஸ்.என்.எல் தற்பொழுது ரூ .94 மற்றும் ரூ .95 என்ற இரண்டு திட்டங்களை வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

பி.எஸ்.என்.எல் இரண்டு புதிய திட்டம் அறிமுகம்
பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ள ரூ.94 மற்றும் ரூ.95 ஆகிய இரண்டு திட்டங்களும் தரவு மற்றும் அழைப்பு சலுகைகளுடன் வருகிறது. ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர், கேரளா, லடாக், லட்சத்தீவு, தெலுங்கானா மற்றும் ஒடிசா வட்டங்களைத் தவிர இந்தியா முழுவதும் இந்த திட்டம் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் ரூ .96 திட்டத்தை நிறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளான் அட்வான்ஸ்
பிளான் அட்வான்ஸ் என்று அழைக்கப்படும் ரூ. 94 மற்றும் பிளான் அட்வான்ஸ் ரூ. 95 ஆகிய இரண்டு திட்டங்களும் மொத்தமாக 3 ஜிபி டேட்டா சலுகையுடன், 100 நிமிட இலவச அழைப்பு சலுகைகள் மற்றும் பயனர்களுக்கு 60 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது.

90 நாட்கள் வேலிடிட்டி
உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் முற்றிலுமாக இலவசம், ரோமிங்கிலும் பயன்படுத்தலாம். 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவதற்குள் இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் காலை பயனர் பயன்படுத்த வேண்டும்.

இலவச அழைப்பாளர் டியூன் வசதி
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ .94 திட்டம் நிமிட கணக்கின் கீழ் செயல்படுகிறது. அதேபோல், ரூ .95 திட்டம் ஒரு வினாடிக்கு என்ற கணக்கின் கீழ் செயல்படுகிறது. இரண்டு திட்டங்களும் 60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தாது. பொதுவாக பிஎஸ்என்எல் ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) சேவையின் கீழ் அழைப்பாளர் ட்யூன்களை வழங்குகிறது மாதத்திற்கு ரூ. 30 வசூலிக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.

இலவசம் முடிந்த பின் கட்டணம் எவ்வளவு?
ரூ .94 திட்டத்தில் இலவச அழைப்புகளைப் பயன்படுத்திய பிறகு, பி.எஸ்.என்.எல் முறையே உள்ளூர் அழைப்புகள் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ .1 என்ற விதத்தில் சரியாக நிமிடத்திற்கு ரூ .1.3 என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. ரூ .95 திட்டத்தில் கிடைக்கும் இலவச அழைப்புகளைப் பயன்படுத்திய பிறகு, பி.எஸ்.என்.எல் உள்ளூர் அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ .0.02 காசுகள் என்றும், எஸ்.டி.டி அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ. 0.024 காசுகள் என்றும் வசூலிக்கிறது.

பிவி 94 மற்றும் பிவி 95 டாப் அப்
எஸ்எம்எஸ் கட்டணத்தைப் பொறுத்தவரை, பிஎஸ்என்எல் உள்ளூர் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ 0.8 காசுகள் வசூலிக்கிறது. அதேபோல், தேசிய எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ .1.2 வசூலிக்கிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த பிவி 94 மற்றும் பிவி 95 டாப் அப், வெப் போர்ட்டல் மற்றும் சுய பாதுகாப்பு மற்றும் எஸ்எம்எஸ் மூலம் செயல்படுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications