120ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் 875 பிராட்பேண்ட் திட்டம் அறிமுகம்.!
இந்த திட்டமானது, வீட்டு சந்தாதாரர்களுக்கு பொருந்தாததால், எந்த குரல் அழைப்பு நன்மையையும் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நம்பர் 1 இன்டர்நெட் சேவை ஆபரேட்டர் என்கிற பெயரை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பின்கீழ், அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அற்புதமான (எப்டிடிஎச்) பைபர் டூ ஹோம் பிராட்பேண்ட் திட்டமொன்றை அறிவித்துள்ளது.
தற்போது வரையிலாக கேரள வட்டத்தில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன.? விலை நிர்ணயம் என்ன.? போன்ற தகவல்களை விரிவாக காண்போம்.

புதிய எப்டிடிஎச் பிராட்பேண்ட்
ரூ.875/- மதிப்பு கொண்ட பிஎஸ்என்எல்-ன் புதிய எப்டிடிஎச் பிராட்பேண்ட் திட்டமானது (குறைந்தப்பட்சம்) 10 எம்பிபிஎஸ் அளவிலான பதிவிறக்க வேகத்தை கொண்டுள்ளது.

10 எம்பிபிஎஸ் முதல் 120 எம்பிபிஎஸ் வரை.!
ஒரு மாத காலம் என்கிற செல்லுப்படி வரம்பை கொண்டுள்ள இந்த திட்டமானது 120ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த ரூ.875 பிராட்பேண்ட் திட்டமானது, 10 எம்பிபிஎஸ் முதல் 120 எம்பிபிஎஸ் வரையிலான வேகத்தின் கீழ் உயர் வேக தரவுகளை வழங்குகிறது.

குரல் அழைப்பு நன்மைகள் கிடையாது.!
வரம்பு முடிந்த பின்னர் 2 எம்பிபிஎஸ் என்கிற அளவிற்கு வேகம் குறைக்கப்படும், அதற்கு எந்த வரம்பும் கிடையாது. இந்த திட்டமானது, வீட்டு சந்தாதாரர்களுக்கு பொருந்தாததால், எந்த குரல் அழைப்பு நன்மையையும் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரத்தியேகமான சேவை.!
அதாவது இந்த திட்டமானது கேரள மாநிலத்தின் ஐடி மிஷன் அக்ஷயா இ-கேந்திராக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

வருடாந்திர கட்டண விருப்பம்.!
அதாவது இந்த பிராட்பேண்ட் திட்டத்தின் ஆண்டு சந்தா ரூ.9,625/- ஆகும். இதன் அர்த்தம் பிஎஸ்என்எல் நிறுவனமானது இந்த திட்டத்தின் மீதான வருடாந்திர கட்டண விருப்பத்தையும் வழங்குகிறது.

மோடம் சார்பாக ரூ.90/- என்கிற மாதாந்திர கட்டணம்.!
இந்த திட்டத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பு வைப்புத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்பது ஒருபக்கமிருக்க, மறுகையில் ஒவ்வொரு மாதமும் மோடம் சார்பாக ரூ.90/- என்கிற கட்டணத்தை நிறுவனம் வசூலிக்கிறது.

16 ஆண்டுகள் கழித்தும்கூட வலுவான நிலை.!
கேரள மாநிலத்தில் மொத்தம் 42 அக்ஷய இ-கேந்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு மையமும் பல பொது சேவைகளை வழங்குகிறது. கேரள அரசாங்கத்தின் இந்த முயற்சியானது 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகள் கழித்தும்கூட வலுவான நிலைப்பாட்டில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.


பொதுவான பயனர்களுக்கு 50 எம்பிபிஎஸ்.!
இ-கேந்திராவிற்கான இந்த பிரத்யேக பிராட்பேண்ட் திட்டத்தை தவிர்த்து, பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் பொதுவான பயனர்களுக்கு 50 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்க வேகத்தின்கீழ் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications