Home
News

பிஎஸ்என்எல் ரூ.699 வவுச்சர் அறிமுகம்: 160 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மை?

பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனம்

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.699 வவுச்சரை நாடு முழுவதும் அணுக கிடைக்கும்படி நீட்டித்துள்ளது. வெளிவந்த
தகவலின்படி இது ஏற்கனவே கேரள வட்டத்தை தவிர மீதமுள்ள தொலைத் தொடர்பு வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைத்தது.

கேரளாவில் ரீசார்ஜ் செய்ய

இப்போது வெளிவந்த கேரள டெலிகாமின் அறிக்ககையின்படி, இந்த வவுச்சர் ஆனது இப்போது கேரளாவில் உள்ள பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது மற்றும் ரூ.699 பிஎஸ்என்எல் வவுச்சர் 2021 ஜனவரி 25 முதல் கேரளாவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

திட்டத்தின் நன்மைகளைப் பற்றி

பிஎஸ்என்எல் ரூ.699 வவுச்சரின் நன்மைகள் கேரள வட்டத்தில் மாற்றமடையில்லை, அதாவது பிற வட்டங்களில் வழங்கும் அதே நன்மைகளைத்தான் கேராளாவிலும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பற்றி சற்று விரவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.699 வவுச்சரின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.699 வவுச்சரின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.699 வவுச்சர் ஆனது பயனர்களுக்கு 0.5ஜிபி அளவிலான தினசரி FUP டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு குறிப்பிட்ட வரம்பை மீறிய பின்னர் இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு,100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 160 நாட்கள் ஆகும்.

ய்ய பயனர்கள் டெலிகாம்

குறிப்பாக அழைப்பு நன்மை மற்றும் மெசேஜ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பயனர்கள் ரூ.699 பிஎஸ்என்எல் வவுச்சர்-ஐ தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதேபோல் டேட்டா நன்மை அதிகம் தேவைப்படும் பயனர்கள் இதை தேர்வுசெய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.

முன்பு குறிப்பிட்டபடி இந்த வவுச்சர் ஆனது ஜனவரி 25. 2021 முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். பின்பு இதை ரீசார்ஜ் செய்யபயனர்கள் டெலிகாம் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குச் செல்லலாம் அல்லது *444*699# என்கிற யு.எஸ்.எஸ்.டி குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

டைப் செய்து

அதேபோல் PLAN BSNL699 என்பதை டைப் செய்து 123 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இந்த திட்டத்தை பெறமுடியும். ஆனால் இதை செய்வதற்கு முன்பு உங்களிடம் போதுமான அளவு பேலன்ஸ் உள்ளதா என்பதை உறுது செய்து கொள்ளவும்.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் கேராளாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச 4ஜி சிம் கார்டை வழங்குகிறது. இது ஜனவரி 31 2021 வரை அணுக கிடைக்கும் என்றும், இது ஒரு குறிப்பிட்ட கால விளம்பர சலுகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டை பெறுவதற்கு

இந்த இலவச 4ஜி சிம் கார்டை பெறுவதற்கு வாடிக்கையாளர் செய்ய வேண்டியது எல்லாம் ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்டபர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பனை (எஃப்.ஆர்.சி) தேர்வு செய்ய வேண்டும். மேலும் இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டால், வாடிக்கையாளர் பிஎஸ்என்எல்லிலிருந்து இலவச சிம் கார்டைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

699 வவுச்சரை தவிர, ரூ.398 வவுச்சரும் வைத்துள்ளது

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.699 வவுச்சரை தவிர, ரூ.398 வவுச்சரும் வைத்துள்ளது. இந்த பிஎஸ்என்எல் ரூ.398 வவுச்சர் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றுடன் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. மேலும் இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL launches Rs.699 voucher: 160 days validity.!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X