இது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 100 ஜிபி CUL இணைய சேவை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

புதிய 100 ஜிபி CUL திட்டம்

புதிய 100 ஜிபி CUL திட்டம்

பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய 100 ஜிபி CUL திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது அந்தமான் மற்றும் நிக்கோபார், கேரளா, மேற்கு வங்கம், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிககளை தவிர பிற அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது.

ஜூலை 3 ஆம் தேதி அறிமுகம்

ஜூலை 3 ஆம் தேதி அறிமுகம்

பிஎஸ்என்எல் இந்த புதிய திட்டம் ஜூலை 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் ரீசாரஜ் செய்யும்போது 100 ஜிபி டேட்டா 20 எம்பிபிஎஸ் வேகத்துடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒருமாதம் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

100 ஜிபி சியூஎல் திட்டம்

100 ஜிபி சியூஎல் திட்டம்

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் 100 ஜிபி சியூஎல் திட்டம் குறித்து பிஎஸ்என்எல் சென்னை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து அந்தமான் மற்றும் நிக்கோபார், கேரளா, மேற்கு வங்கம், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளுக்கு சுற்றறிக்கை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் அழைப்பு + எஸ்டிடி அழைப்பு

உள்ளூர் அழைப்பு + எஸ்டிடி அழைப்பு

இந்த திட்டத்தில் 100 ஜிபி சியூஎல் பிராட்பேண்ட் திட்டத்தோடு உள்ளூர் அழைப்பு + எஸ்டிடி அழைப்புகளுக்கு வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளை வழங்குகிறது. ஐஎஸ்டி அழைப்பை மேற்கொள்தற்கு ரூ.1.20 வசூலிக்குப்படுகிறது.

திட்டத்தின் விலை ரூ.499

திட்டத்தின் விலை ரூ.499

இந்த திட்டத்தில் 100 ஜிபி சியூல் வழங்கப்படுகிறது. இதன் வேகம் முடிந்த பிறகு 2 எம்பிபிஎஸ் எஃப்யூபி வேகத்தோடு இணைய வேகம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ .94 மற்றும் ரூ .95 என்ற இரண்டு திட்டம்

ரூ .94 மற்றும் ரூ .95 என்ற இரண்டு திட்டம்

பிஎஸ்என்எல் சமீபத்தில் ரூ .94 மற்றும் ரூ .95 என்ற இரண்டு திட்டங்களை வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் அறிமுகம் செய்துள்ளது. ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர், கேரளா, லடாக், லட்சத்தீவு, தெலுங்கானா மற்றும் ஒடிசா வட்டங்களைத் தவிர இந்தியா முழுவதும் இந்த திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

100 நிமிட இலவச அழைப்பு சலுகை

100 நிமிட இலவச அழைப்பு சலுகை

பிளான் அட்வான்ஸ் என்று அழைக்கப்படும் ரூ. 94 மற்றும் பிளான் அட்வான்ஸ் ரூ. 95 ஆகிய இரண்டு திட்டங்களும் மொத்தமாக 3 ஜிபி டேட்டா சலுகையுடன், 100 நிமிட இலவச அழைப்பு சலுகைகள் மற்றும் பயனர்களுக்கு 60 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது.

90 நாட்கள் வேலிடிட்டி

90 நாட்கள் வேலிடிட்டி

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் முற்றிலுமாக இலவசம், ரோமிங்கிலும் பயன்படுத்தலாம். 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவதற்குள் இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் காலை பயனர் பயன்படுத்த வேண்டும்.

60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதி

60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதி

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ .94 திட்டம் நிமிட கணக்கின் கீழ் செயல்படுகிறது. அதேபோல், ரூ .95 திட்டம் ஒரு வினாடிக்கு என்ற கணக்கின் கீழ் செயல்படுகிறது. இரண்டு திட்டங்களும் 60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தாது. பொதுவாக பிஎஸ்என்எல் ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) சேவையின் கீழ் அழைப்பாளர் ட்யூன்களை வழங்குகிறது மாதத்திற்கு ரூ. 30 வசூலிக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.

ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி!ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி!

இலவசம் முடிந்த பின் கட்டணம்

இலவசம் முடிந்த பின் கட்டணம்

ரூ .94 திட்டத்தில் இலவச அழைப்புகளைப் பயன்படுத்திய பிறகு, பி.எஸ்.என்.எல் முறையே உள்ளூர் அழைப்புகள் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ .1 என்ற விதத்தில் சரியாக நிமிடத்திற்கு ரூ .1.3 என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. ரூ .95 திட்டத்தில் கிடைக்கும் இலவச அழைப்புகளைப் பயன்படுத்திய பிறகு, பி.எஸ்.என்.எல் உள்ளூர் அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ .0.02 காசுகள் என்றும், எஸ்.டி.டி அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ. 0.024 காசுகள் என்றும் வசூலிக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL launches RS.499 recharge plan with 100 GB data and unlimited free calling

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X