BSNL பயனர்களுக்கு குட் நியூஸ்; புதிய திட்டம் அறிமுகம்! என்ன விலை? என்ன நன்மை? எப்போ கிடைக்கும்?
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது புதிதாக ரூ.399 என்கிற புதிய ரீசார்ஜ் வவுச்சரை தனது பட்டியலில் சேர்த்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் வாய்ஸ் கால் நன்மை மற்றும் டேட்டா நன்மை என இரண்டு நன்மைகளும் ஒட்டுமொத்தமாக 80 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் ரூ.399 டேரிஃப் வவுச்சரையும் மற்றும் ரூ.1699 டேரிஃப் வவுச்சரையும் தற்பொழுது நிறுத்தியுள்ளது. அதேபோல், பிஎஸ்என்எல் புதிதாக அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.399 ரீசார்ஜ் திட்டமானது வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மட்டுமே ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டுமே கிடைக்கும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரூ.399 புதிய ரீசார்ஜ் திட்டம், பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பிட்ட தினசரி FUP வரம்பு முடிந்த பின் 80kbps என்கிற குறைக்கப்பட்ட இணைய வேகத்தின் கீழ் வரம்பற்ற டேட்டா நன்மையை 80 நாட்களுக்கு வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 250 அவுட்கோயிங் நிமிடங்கள் வழங்கப்படுகிறது. உள்ளூர் + எஸ்.டி.டி + வெளிச்செல்லும் ரோமிங் ஆகிய அனைத்து அவுட்கோயிங் அழைப்புகளும் வாய்ஸ் கால் சேவையின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தினசரி FUP வரம்பு முடிந்தபின், அழைப்புகளுக்கான அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும்.

சரியாகச் சொன்னால், மொபைல் நெட்வொர்க் மற்றும் பிஎஸ்என்எல் லேண்ட்லைன்களுக்கான உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.1 என்ற கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், பிற லேண்ட்லைன் எண்களுக்கான உள்ளூர் அழைப்புகள் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.1.3 காசுகள் என்று கட்டணம் வசூலிக்கப்படும். இத்துடன், இத்திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்கப்படுகிறது.

இதுப்போக, இலவச பிஎஸ்என்எல் காலர் ட்யூன், இலவச லோக்தூன் உள்ளடக்கத்தையும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தை சி-டாப்அப், செல்ப் கேர் மற்றும் வெப் போர்டல் மூலம் ஆக்டிவேட் செய்யலாம். PLAN BSNL399 என்பதை 123 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்தும் ஆக்டிவேட் செய்யலாம். செல்ப் கேர் மூலம் ஆக்டிவேட் செய்தால் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களும், இலவச லோக்தூன் உள்ளடக்கமும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








