Home
News

பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம்: தினசரி 2ஜிபி டேட்டா.! வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த மாதம் துவக்கம் முதலே பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது இந்நிறுவனம். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

ரூ.367 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு

அதாவது ஏற்கனவே கிடைத்த ரூ.367 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு ரூ.30 வரை விலை உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ.397-விலையில் ரீசார்ஜ்செய்யக் கிடைக்கிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ரூ.30 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.397-விலையில் ரீசார்ஜ் செய்தால்நீண்ட நாட்கள் சிம் கார்டுகளை செயலில் வைத்திருக்க முடியும்.

 பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.397

அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற கால் அழைப்பு மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா போன்ற நன்மைகள் 60 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை

குறிப்பாக ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 60 நாட்கள் வரை மட்டுமே இலவச நன்மைகள் கிடைக்கும் என்றும். மேலும் 60 நாட்கள் முடிந்த பின்பு உங்களுக்கு டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல வவுச்சர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை விரிவாகப் பார்ப்போம்.

 பிஎஸ்என்எல்  ரூ.197 ப்ரீபெய்ட்  திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இலவச குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள், 18 நாட்களுக்கு ஸிங் மியூசிக் பயன்பாட்டிற்கான அணுகல் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த அட்டகாசமான திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த திட்டத்தின் இலவச நன்மைகள் 18 நாட்களுக்கு பயன்படும் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

அதேபோல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ.108 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு தனசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்த ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

 பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் ஆனது தற்சமயம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
BSNL launches Rs 397 prepaid plan 2GB data daily!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X