Home
News

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம்.. 100GB டேட்டா! என்னென்ன சலுகைள்? எத்தனை நாள் வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மலிவு விலையில் அதிக நன்மைகளை தரும் சிறப்பு திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதாவது தற்போது ரூ.251 திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல். இந்த திட்டம் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது, அதன்படி நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை கிடைக்கும்.

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம்.. 100GB டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் நன்மைகள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.251 prepaid plan) ஆனது 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 100ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இந்நிறுவனம் வைத்துள்ள ரூ.347 மற்றும் ரூ.485 திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 100ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம்.. 100GB டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 144ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் OTT நன்மை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

photo credit: X, asianetnews

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL launches Rs.251 prepaid plan: What are the benefits? How many days of validity?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X