சரியான நேரத்தில் இறங்கி அடித்த BSNL.. ரூ.249 திட்டம் அறிமுகம்.. 45 நாள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்?
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) போன்ற தனியார் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டத்தை உயர்த்தி வரும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்து அசத்தி உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இப்போது பிஎஸ்என்எல் (BSNL) அறிமுகம் செய்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தைத் (BSNL Rs 249 prepaid plan) தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூட ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. அந்த திட்டங்களின் நன்மைகளையும் இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 249 prepaid plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா மட்டும் தான் பெறமுடியும் என்பதை நினைவில் கொள்க.

அதேபோல் ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. ஜியோசினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆப்களையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel Rs 249 prepaid plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 24ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் விங்க் மியூசிக் இலவச ஹலோ ட்யூன் மற்றும் பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஆகவே ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் தான் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கவில்லை. கூடிய விலையில் இந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும்.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை மைசூரு, மாண்டியா, சாமராஜநகர் மற்றும் குடகு மாவட்டங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்தது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 337 செல்போன் டவர்கள் மைசூரு மற்றும் சாமராஜநகருக்கு 4ஜி சேவையை வழங்கும் எனவும், குடகு மற்றும் மாண்டியாவிற்கு முறையே 200 மற்றும் 153 செல்போன் டவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








