Home
News

வெறும் ரூ.248/-க்கு 3ஜிபி/நாள் + நம்பமுடியாத வேலிடிட்டி: பிஎஸ்என்எல் அதிரடி.!

புதிதாய் அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- ஆனது மொத்தம் 157 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

By Muthuraj

சில தினங்களுக்கு முன்னர், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஒரு முயற்சியின் ஒரு பகுதியாக, "கிரிக்கெட் சீசன் பேக்" என்கிற பெயரின் கீழ் ரூ,251/- திட்டத்தை அறிமுகம் செய்தது.

தற்போது, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் ரூ.251/- ப்ரீபெய்ட் என்கிற கிரிக்கெட் சீசன் திட்டத்தை எதிர்த்து, அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ரூ.248/- ப்ரீபெய்ட் எஸ்டிவி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டமானது ஜியோவி ரூ.251/- கொண்டிருக்கும் அதே செல்லுப்படி காலத்தை கொண்டிருந்தாலும் கூட, ஜியோவை விட அதிகமான டேட்டா நன்மையை வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 3 ஜிபி.!

ஒரு நாளைக்கு 3 ஜிபி.!

புதிதாய் அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- ஆனது மொத்தம் 157 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 51 நாட்கள் ஆகும், அதாவது இந்த திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்று அர்த்தம்.

ஏப்ரல் 30, 2018 வரை மட்டுமே.!

ஏப்ரல் 30, 2018 வரை மட்டுமே.!

ஏப்ரல் 7 (இன்று முதல்) தொடங்கி மே 27 வரை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் மொத்தம் 51 நாட்கள் நடக்கிறது. அதனை மனதிற்கொண்டு வெளியாகியுள்ள்ள இந்த பிஎஸ்என்எல் ரூ.248/- ஆனது ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30, 2018 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்டா நன்மையை மட்டுமே.!

டேட்டா நன்மையை மட்டுமே.!

மேலும் இந்த புதிய ரூ.248 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ், எந்த விதமான குரல் அழைப்பு நன்மையையும் குறிப்பிடப்படவில்லை. எனவே புதிய திட்டம் டேட்டா நன்மையை மட்டுமே வழங்குமொரு திட்டமாக இருக்கலாம்.

ஜியோ ரூ.251/- நன்மைகள்.!

ஜியோ ரூ.251/- நன்மைகள்.!

ஜியோவின் ரூ.251-அந்த நன்மைகளை பொறுத்தவரை, மொத்தம் 51 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம், மொத்தம் 102 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 51 நாட்கள் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்று யூகிக்க முடிகிறது. எனினும் இந்த திட்டத்தின் தினசரி வரம்பு பற்றிய விவரங்களை ஜியோ வெளிப்படுத்தவில்லை.

பரிசுகளை வழங்கும் ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங்.!

பரிசுகளை வழங்கும் ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங்.!

இந்த கிரிக்கெட் சீசன் பேக் உடன், மேலும் இரண்டு புதிய முயற்சிகளையும் ஜியோ அறிவித்துள்ளது. ஒன்று பங்கேற்பாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் 'ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங்' என்கிற மொபைல் கேம் முயற்சி, மற்றொன்று 'ஜியோ தன் தாணா தன் லைவ்' என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
இருவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.!

இருவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.!

கூறப்படும் 'ஜியோ தன் தாணா தன் லைவ்' என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியானது மைஜியோ பயன்பாட்டின் வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்பதும், இந்த நிகழ்ச்சியானது ஜியோ பயனர்கள் மற்றும் ஜியோவை பயன்படுத்தாத நபர்கள் என இருவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Launches Rs 248 Prepaid STV Plan With 153GB Data On Offer for 51 Days. Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X