பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்: 150 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள்?
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து கம்மி விலையில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் பிஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 18 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி வேலிடிட்டி 150 ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு நீங்கள் அழைப்புகளைச் செய்ய விரும்பினால், வேறு ஒரு திட்டத்தில் டாப்-அப் செய்ய வேண்டும்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 197 ப்ரீபெய்ட் திட்டத்தில் 18 நாட்களுக்கு மட்டுமே டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 150 நாட்களுக்கு வேலிடிட்டி உள்ளது. எனவே இதன் மூலம் உள்வரும் அழைப்புகள் (incoming calls) 150 நாட்களுக்கு கிடைக்கும். கம்மி விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி மட்டும் தேடும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டேட்டா மறறும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. ஆனால் இந்த திட்டத்தில் 22 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி22 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 0.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள்எதுவும் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் இலவச PRBT சேவையை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிபபாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் இலவச PRBT சேவையை வழங்கும் இந்த பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்எனஎல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

அதேபோல் சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.184, ரூ.185, ரூ.186 விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு திட்டங்களின் விவரங்களையும் முழுமையாக பார்க்கலாம். ரூ.184 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.185 மற்றும் ரூ.186 திட்டங்களில் தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. இந்த மூன்று திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன்வருகிறது. வழங்கப்பட்ட வரம்புக் கொள்கை முடிந்த பின் இந்த திட்டங்களில் இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்
ஆனால் இந்த திட்டங்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்வி வரலாம். அதற்கான பதில் குறித்து பார்க்கையில், ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் Lystn போட்காஸ்டின் கூடுதல் பலனை பெறுவார்கள். ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் M/S ஆன்மொபைல் குளோபல் லிமிடெட் மற்றும் BSNL ட்யூன்ஸ் வழங்கும் ப்ரோக்ரஸிவ் வெப் APP (PWA)-ன் அரீனா மொபைல் கேமிங் சேவையை இணைந்து பெறுவார்கள். அதேபோல் ரூ.186 திட்டத்தில் மேலே வழங்கப்பட்ட தொகுப்புகளுடன் கூடுதலாக ஹார்டி கேம்ஸ் மற்றும் பிஎஸ்என்எல் டியூன்களின் கூடுதல் பலன்களை பெறுவார்கள்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
News Source: bgr.in


Click it and Unblock the Notifications