Home
News

பிஎஸ்என்எல் அதிரடி : ரூ.149/-க்கு எல்லாமே (கால்ஸ்+டேட்டா).!

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் புதிய திட்டமொன்றை இன்று முதல் அறிமுகம் செய்கிறது. இந்த திட்டம் மூலம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தரவு என மொபைல் பயனர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது.

By Muthuraj

புதிய ஆண்டே தொடங்கி விட்ட போதிலும் கூட, ரிலையன்ஸ் ஜியோ அடித்தளம் போட்டு ஆரம்பித்து வைத்த தொலைத்தொடர்பு சலுகைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. தண்னிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள டெலிகாம் நிறுவனங்களுக்கு, அதிரடி சலுகைகளை வழங்கிவது தவிர்த்து வேறு வழியே இல்லாத ஒரு நிலை ஆகிவிட்டது என்பது ஒருபக்கமிருக்க, அம்மாதிரியாக வெளியிடப்படும் சலுகைகள் தோல்வி பயத்தினால் மட்டுமின்றி புத்திசாலித்தனத்தாலும் நிரம்பியிருக்க வேண்டும். அப்போதுதான், நிலைத்தன்மை பெற முடியும்.

அப்படியான சலுகைகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக கூறலாம். அப்படியாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் புதிய திட்டமொன்றை இன்று முதல் அறிமுகம் செய்கிறது. இந்த திட்டம் மூலம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தரவு என மொபைல் பயனர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது. அவைகள் என்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

ரூ.149/-க்கு

ரூ.149/-க்கு

போட்டியாளர்களுகளுடன் தன்னை தக்கவைத்துக்கொள்ள பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.149/- சலுகையில் ஒரு மாத கால எந்த நெட்வொர்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை தினமும் 30 நிமிடங்களுக்கு நிகழ்த்திக் கொள்ளலாம்.

ரூ.439/-க்கு

ரூ.439/-க்கு

வாடிக்கையாளர்கள் ரூ.439/-க்கு இதே இலவச வரம்பற்ற அழைப்புகள் சலுகையை மூன்று மாதங்களுக்கு பெற முடியும் என்றும் பிஎஸ்என்எல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

30 நிமிடங்கள்

30 நிமிடங்கள்

இந்த சலுகையுடன் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு 300 எம்பி அளவிலான டேட்டாவும் கிடைக்கும். நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் கீழ் மற்ற நெட்வொர்க் உடனான அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் வண்ணம் நிறுவனம் மூலம் சலுகை வழங்கப்படுகிறது.

அனைவரும் பெறலாம்

அனைவரும் பெறலாம்

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த விளம்பர வாய்ப்பை அனைத்து புதிய வாடிக்கையாளர்களும் மற்றும் பிற நிறுவன சேவையில் இருந்து போர்ட் செய்து பிஎஸ்என்எல் சேவைக்குசேர்ந்த வாடிக்கையாளர்கள் ஆகிய அனைவரும் பெறலாம்.

பல முயற்சிகள் ஒன்றாகும்

பல முயற்சிகள் ஒன்றாகும்

பிஎஸ்என்எல் எப்போதும் தங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறந்த மற்றும் பொருளாதார சேவைகளை வழங்குவதில் ஒரு முன்னோடியாக உள்ளது மற்றும் இந்த திட்டம் நிறுவனத்தின் பல முயற்சிகள் ஒன்றாகும். வாடிக்கையாளர்கள், இது எங்கள் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தின் மூலம் மார்ச் 2015-ல் இருந்து இப்போது வரையிலாக சந்தையில் 1 சதவிகிதம் அதிகரிக்க உதவியுள்ளது" என்று நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.15,000/-க்குள் கிடைக்கும் டாப் 6 இன்ச் ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
BSNL launches a new voice calling scheme of Rs.149, offering unlimited calls to any network. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X