Just In
- 1 hr ago
அறிமுகமானது மோட்டோ ஜி52ஜே 5ஜி: 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி- விலை இதுதான்!
- 1 hr ago
இன்று விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!
- 2 hrs ago
ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 5 hrs ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்கள்.!
Don't Miss
- Sports
"தரையை துடைக்கும் பணி முதல் கிரிக்கெட் வரை".. யார் இந்த ரிங்கு சிங்.. நெகிழ வைக்கும் கதை!
- News
‛மசூதிபோல் இருக்கே என தோண்டிவிடாதீர்’... இது அணு ஆராய்ச்சி மையம்... பாஜகவை பந்தாடிய பெண் எம்பி
- Lifestyle
எகிறும் தக்காளி விலை: தக்காளிக்கு பதிலாக வேறு எந்தெந்த பொருட்களைப் பயன்படுத்தலாம் தெரியுமா?
- Movies
சீரியல் நடிகை தற்கொலையில் திடீர் திருப்பம்… காதலன் கைது !
- Finance
பிரிட்டன் அரசை மிரட்டும் ரெசிஷன்.. 40 ஆண்டு மோசமான நிலை..!
- Automobiles
ரேட் கம்மியா இருந்தாலும் ரயில்வே தண்டவாளத்திற்கு பக்கத்துல இடம், வீடு வாங்க கூடாது... இவ்ளோ பிரச்னைகள் வருமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
BSNL புதிதாக வழங்கும் ரூ.87 திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதுவரை கிடைக்காத பலே நன்மைகள்..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் பயனர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. BSNL அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டம் நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியாவில்லை. இருப்பினும், இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மை கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. அதனால், இந்த திட்டத்தின் விபரங்களை பற்றி அறிந்துகொள்ளலாம். BSNL பயனர்களுக்கு கிடைக்கும் மிகவும் விலை மலிவான திட்டங்களின் பட்டியலில் இந்த திட்டமும் ஒன்றாக சேர்ந்துள்ளது.

BSNL புதிதாக வழங்கும் ரூ.87 திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களைப் பார்த்த பிறகு, குறுகிய காலத் திட்டம் மற்றும் பல நன்மைகள் நிறைந்த குறுகிய காலத் திட்டத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கு, இது சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. இனி நேரத்தை வீணடிக்காமல், BSNL வழங்கும் புதிய ரூ.87 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் முழுமையான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். உங்கள் வட்டத்தில் இந்த திட்டம் கிடைத்தால் நிச்சயமாக ரீசார்ஜ் செய்து பயன்பெறுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 87 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள்
பிஎஸ்என்எல் அதன் ரூ.87 ப்ரீபெய்ட் திட்டத்தை மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் தொகுக்கப்பட்ட அனைத்து இலவசங்களும் பயனர்களுக்கு முழுமையான 14 நாட்களுக்குக் கிடைக்கும் வேலிடிட்டி நன்மையை கொண்டுள்ளது. ரூ.87 திட்டமானது தினசரி 1ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது மொத்தம் 14ஜிபி டேட்டாவை வெறும் ரூ. 87 விலையில் வழங்குகிறது. அதன் பிறகு டேட்டாவின் வேகம் 40 கேபிபிஎஸ் ஆகக் குறையும்.
மனித நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறதா NASA? ஏலியன் வேட்டைக்கான விபரீதம் துவங்கியதா?

ரூ.100 விலைக்குள் SMS நன்மையும் வேண்டுமா?
மேலும், இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு தினமும் 100 SMS மற்றும் இலவச வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. இறுதியாக, இந்த திட்டம் ரூ.100க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் இதுவரை கிடைக்காத SMS நன்மையை இப்போது அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. மேலும், BSNL ஆனது ONE97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் மூலம் ஹார்டி கேம்ஸ் மொபைல் சேவையையும் இணைக்கும். இது BSNL வழங்கும் உண்மையிலேயே தனித்துவமான ப்ரீபெய்ட் திட்டமாகும்.

எந்த வட்டங்களில் எல்லாம் இந்த திட்டம் இப்போது கிடைக்கிறது?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது ஒவ்வொரு வட்டத்திலும் இந்தத் திட்டத்தை வழங்கவில்லை. சத்தீஸ்கர் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் இந்தத் திட்டத்தைப் பெறாது. பட்டியலில் இன்னும் சில வட்டங்கள் கூட ஓநாயோகப்படாமல், ஆனால் பயனர்கள் BSNL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அவரவர் வட்டத்தில் இந்த திட்டம் கிடைக்கிறதா என்பதை நாம் சரிபார்க்கலாம்.
செயற்கை பெண் உடல்களை சந்திரனுக்கு அனுப்பும் நாசா.. எதற்கு தெரியுமா? விஷயமே வேற பாஸ்..

மலிவு விலையில் கிடைக்கும் வரப்பிரசாதம்
இந்த திட்டத்தில், பயனர்கள் வெறும் ரூ.6.21 விலையில் 1ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவைகளுக்கு ஒரே நேரத்தில் ரூ.100க்கு மேல் செலுத்த விரும்பாத பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், இந்த திட்டம் ஒரு நுகர்வோருக்கு தேவையான அனைத்தையும் மலிவு விலையில் வழங்குகிறது. இந்தத் திட்டம் வழங்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு 14 நாட்களின் செல்லுபடியும் மோசமான ஒப்பந்தம் அல்ல.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999