Home
News

2026 புத்தாண்டை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த BSNL.. 365 நாட்கள் வேலிடிட்டி.. என்ன விலை?

பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் 2026 புத்தாண்டை முன்னிட்டு இப்போது புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதவாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த திட்டத்தில் வழங்கப்படும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

2026 புத்தாண்டை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த BSNL..

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் கிடைக்காது. மேலும் ஏற்கனவே இந்நிறுவனம் தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களையும் இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் கிடைக்காது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

2026 புத்தாண்டை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த BSNL..

அதுவும் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக பிஎஸ்என்எல் தற்போது வழங்கும் தினசரி 3ஜிபி டேட்டா திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த 4ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் அடுத்த ஆண்டு இந்நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL launches new Rs.2799 prepaid plan for New Year 2026: Check Full Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X