சத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.! பயனர்கள் மகிழ்ச்சி.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

 மல்டி ரீசார்ஜ் வசதி

மல்டி ரீசார்ஜ் வசதி

தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த மல்டி ரீசார்ஜ் எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த புதிய வசதி பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பயனர்கள் தங்களது தற்போதைய திட்டம் காலாவதியாகும் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தங்கள் அக்கவுண்ட்களை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த மல்டி ரீசார்ஜ் வசதியானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வவுச்சர்(பி.வி)மற்றும் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் (எஸ்.டி.வி) என ரூ.97 முதல் ரூ.1,999 வரை நீளும் அனைத்து திட்டங்களுக்கும் அணுக கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாஷ்: இனி கூகுள் மேப் செயலியில் இதையும் தெரிந்துக் கொள்ளலாம்?சபாஷ்: இனி கூகுள் மேப் செயலியில் இதையும் தெரிந்துக் கொள்ளலாம்?

ஜிபி டேட்டா மற்றும் 100நிமிடங்கள் குரல் அழைப்பு

சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,இந்த வசதி பயனர்களுக்கு நீட்டிக்கப்பட்ட நன்மைகள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் 3ஜிபி டேட்டா மற்றும் 100நிமிடங்கள் குரல் அழைப்பு நன்மைகள் வழங்கும் பிஎஸ்என்எல்-ன் ரூ.94 மற்றும் ரூ.95 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகமான சில நாட்களுக்கு பிறகு இந்த புதிய மல்டி ரீசார்ஜ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 மல்டி ரீசார்ஜ்

அதன்படி பிஎஸ்எனஎல் வழங்கும் மல்டி ரீசார்ஜ் வசதியானது நிறுவனத்தின் ரூ.97, ரூ.98, ரூ.118, ரூ.187, ரூ.247, ரூ.319, ரூ.399, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.699, ரூ.997, ரூ.1,699, மற்றும் ரூ.1.999 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு பொருந்தும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம்

குறிப்பாக நாட்டின் அனைத்து தொலை தொடர்பு வட்டங்களிலும் இந்த புதிய வசதி அணுக கிடைக்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் பயனர்கள் தற்போதுள்ள திட்டம் காலாவதியான பிறகு இந்த அட்வான்ஸ்டு ரீசார்ஜ் தானாகவே ஆக்டிவேட் ஆகும்என்றும், எஸ்எம்எஸ் செய்தி மூலம் பயனர்களுக்கு இந்த வசதி குறித்து தெரிவிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம்
தெரிவித்துள்ளது.

டி ரீசார்ஜ் வசதி ஆனது ரிலையன்ஸ்

பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவந்துள்ள மல்டி ரீசார்ஜ் வசதி ஆனது ரிலையன்ஸ் ஜியோவில் பயனர்கள் தங்கள் திட்டங்களுக்குமுன்கூட்டியே பணம் செலுத்துவதைப் போலவே செயல்படுகிறது. பின்பு ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்ற வசதியை வைத்துள்ளது.

ன் பல ரீசார்ஜ்களை செய்ய

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பயனர்களை ஒரே டினாமினேஷனின் பல ரீசார்ஜ்களை செய்ய அனுமதிக்கிறது, ஆனால் அது செல்லுபடியை நீட்டிக்காது மற்றும் ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து வேலிடிட்டியை கணக்கும் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் சமீபத்தில் ரூ .94 மற்றும் ரூ .95 என்ற இரண்டு திட்டங்களை வாய்

பிஎஸ்என்எல் சமீபத்தில் ரூ .94 மற்றும் ரூ .95 என்ற இரண்டு திட்டங்களை வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் அறிமுகம் செய்துள்ளது. ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர், கேரளா, லடாக், லட்சத்தீவு, தெலுங்கானா மற்றும் ஒடிசா வட்டங்களைத் தவிர இந்தியா முழுவதும் இந்த திட்டம்தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேலிடிட்டியுடன்

உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் முற்றிலுமாக இலவசம், ரோமிங்கிலும் பயன்படுத்தலாம். 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவதற்குள் இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் காலை பயனர் பயன்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ .94 திட்டம் நிமிட கணக்கின் கீழ் செயல்படுகிறது. அதேபோல், ரூ .95 திட்டம் ஒரு வினாடிக்கு என்ற கணக்கின் கீழ் செயல்படுகிறது. இரண்டு திட்டங்களும் 60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதியை வழங்குகிறது என்பது
குறிப்பிடத்தாது. பொதுவாக பிஎஸ்என்எல் ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) சேவையின் கீழ் அழைப்பாளர் ட்யூன்களை வழங்குகிறது மாதத்திற்கு ரூ. 30 வசூலிக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.

இலவச அழைப்புகளைப் பயன்படுத்திய பிறகு, பி.எஸ்.என்.எல் முறையே

ரூ .94 திட்டத்தில் இலவச அழைப்புகளைப் பயன்படுத்திய பிறகு, பி.எஸ்.என்.எல் முறையே உள்ளூர் அழைப்புகள் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ .1 என்ற விதத்தில் சரியாக நிமிடத்திற்கு ரூ .1.3 என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. ரூ .95 திட்டத்தில் கிடைக்கும் இலவச அழைப்புகளைப் பயன்படுத்திய பிறகு, பி.எஸ்.என்.எல் உள்ளூர் அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ .0.02 காசுகள் என்றும், எஸ்.டி.டி அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ. 0.024 காசுகள் என்றும் வசூலிக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Brings Multiple Recharge Facility for Prepaid Plans Starting at Rs. 97: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X