மொபிகுவிக் நிறுவனத்துடன் இணைந்து மொபைல் வாலட் வசதியை அளிக்கும் 'பி.எஸ்.என்.எல்

By Siva
|

தனியார் மொபைல் நிறுவனங்களுக்கு இணையாக புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை திருப்தி செய்து வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது புதிய வசதியாக மொபைல் வாலட் என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் 100 மில்லியன் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் இ-காமர்ஸ் முறையில் பில் தொகை செலுத்துவது உள்பட பல்வேறு பலன்களை பெறுவர்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் புதிய வசதி மொபைல் வாலட்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்காக இந்த மொபைல் வாலட்டை மொபிகுவிக் என்ற நிறுவனம் செய்து தந்துள்ளது. ஏற்கனவே 1.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கும் மொபிகுவிக் உடன் பி.எஸ்.என்.எல் இணைவதால் இது இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் வாலட் நிறுவனமாக தற்போது மாறுகிறது.

இந்த மொபிகுவிக் செயலி மிக வேகமாக ரீசார்ஜ், பில்தொகை செலுத்துதல், ஆன்லைன் ஷாப்பிங் செய்தல் மற்றும் பேருந்து டிக்கெட்டுக்களை புக் செய்தல் ஆகியவற்றுக்கு உதவுகிறது. எந்த மொபைல் போனுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் ரீசார்ஜ் செய்ய உதவும் செயலிகளில் ஒன்று தான் இது.

அக்டோபர் 5 முதல் அதிரடியான கூகுள் பிக்சல் 2 மற்றும் 2 எக்ஸ்எல்.!அக்டோபர் 5 முதல் அதிரடியான கூகுள் பிக்சல் 2 மற்றும் 2 எக்ஸ்எல்.!

மேலும் பயனாளிகள் இந்த செயலி மூலம் டாப் அப், எஸ்.எம்.எஸ் டேட்டா, லோக்கல், STD, ISD, போஸ்ட்பெய்ட், DTH பில் மற்றும் பல ஆஃபர்களையும் பெற்று கொள்ளலாம். மேலும் ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட்டுக்களையும் இந்த வாலட் மூலம் பெறலாம்.

பி.எஸ்.என்.எல் சேர்மன் அனுபம் ஸ்ரீவத்சவா அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'மொபிகுவிக் நிறுவனத்துடன் இணைந்துள்ள இந்த ஏற்பாட்டின்மூலம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் கனவை நிறைவேற்றுவதில் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் ஒரு அங்கமாக இருக்கின்றது என்பதற்காக பெருமைப்ப்படுகிறோம். எங்களது 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த சேவை இருக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது.

இதுகுறித்து மொபிகுவிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பிபின் ப்ரித்திசிங் எனப்வர் கூறியபோது, 'பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்துடன் கைகோர்த்ததில் பெருமை அடைகிறோம்' என்று கூறியுள்ளார். 'பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இதுவொரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றே தான் கருதுவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த மொபைல் வாலட் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் போன்களில் செயல்படும் என்று ஸ்ரீவத்சா மேலும் கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
The wallet has been developed and issued by MobiKwik on behalf of BSNL.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X