Home
News

BSNL விஸ்வரூபம்.. புது சேவை.. 500+ சேனல்கள் இலவசம்.. தமிழ்நாட்டுக்கு அடிச்சது.. இண்ட்ராநெட் ஃபைபர் டெலிவிஷன்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் - பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Ltd - BSNL) நிறுவனமானது, 7 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பழைய லோகோவை தூக்கிவிட்டு புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. இந்த 7 சேவைகளில் பிஎஸ்என்எல் ஐஎப்டிவி சேவையானது (BSNL IFTV Service) தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. ஏனென்றால், எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், தமிழ்நாட்டின் எப்டிடிஎச் யூசர்களுக்கு (FTTH Users) கிடைக்க இருக்கிறது.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படி பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப பிஎஸ்என்எல் நிறுவனம் படிப்படியாக 4ஜி சேவைகளை வழங்கி தொடங்கிவிட்டது. இப்போது, லோகோவை மாற்றி இருக்கிறது. கூடவே, 7 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

BSNL விஸ்வரூபம்.. புது சேவை.. 500+ சேனல்கள் இலவசம்.. தமிழ்நாட்டில்!

ஆகவே, பிஎஸ்என்எல் வை-பை ரோமிங் (BSNL Wi-Fi Roaming), பிஎஸ்என்எல் ஐஎப்டிவி (BSNL IFTV), எனி டைம் சிம் - ஏடிஎஸ் (Any Time SIM), டைரக்ட்-டு-டைரக்ட் சர்வீஸ் (Direct-to-Direct Service), பப்ளிக் புரொடெக்சன் & டிசாஸ்டர் ரிலீப் (Public Protection & Disaster Relief) மற்றும் பிரைவேட் 5ஜி மைன்ஸ் (Private 5G Mines) உள்ளிட்ட சேவைகள் இப்போது களமிறங்கி இருக்கின்றன.

இதில் தமிழ்நாட்டின் கஸ்டமர்களை பிஎஸ்என்எல் ஐஎப்டிவி சேவை தட்டித்தூக்கி இருக்கிறது. இதற்கு காரணம் ஏற்கனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இண்ட்ராநெட் ஃபைபர் டிவி (Intranet Fibre TV) சேவைகள் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு விட்டன. இந்த சேவை மூலம் 500 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) இலவசமாக கிடைக்க இருக்கின்றன.

இந்த சேவைகள் யாருக்கு கிடைக்கிறது? தமிழ்நாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் எப்டிடிஎச் யூசர்களுக்கு இந்த சேவை கிடைக்க இருக்கிறது. அதாவது, பிஎஸ்என்எல் ஃபைபர் மூலம் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி வரும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக இந்த லைவ் டிவி சேனல்கள் சலுகை கொடுக்கப்பட இருக்கிறது. இப்போதைக்கு இந்த டிவி சேனல்களுக்கு கட்டணம் இல்லை.

500 பிரீமியம் சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த இண்ட்ராநெட் ஃபைபர் டெலிவிஷன் சேவையை பெறுவதற்கு பிஎஸ்என்எல் கஸ்டமர்களிடம் ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்குமேல் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட் டிவி இருக்க வேண்டும். ஏற்கனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆப் மூலம் லைவ் டிவி சேனல்களை வழங்க தொடங்கிவிட்டது. மத்திய பிரதேச கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

இந்த பிஎஸ்என்எல் டிவி ஆப் (BSNL Live TV App) விரைவில் தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் வர இருக்கிறது. இந்த ஆப் மூலம் 300+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த சேனல்களுக்கும் கூடுதல் கட்டணம் கிடையாது. பிஎஸ்என்எல் எப்டிடிஎச் யூசர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. இப்படி புதுப்புது சேவைகள் கிடைக்க தொடங்கிவிட்டது.

இந்த டிவி சேனல்கள் கிடைக்கும் திட்டங்கள் எப்படி? பிஎஸ்என்எல் ஃபைபர் திட்டங்களில் ரூ.599 விலையில் கிடைக்கும் திட்டத்தில் இந்த சேவைகள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தில் 75 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. அதிகபட்சமாக 4000 ஜிபி டேட்டா வரையில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 4 எம்பிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

இந்த டேட்டா சலுகைகள் போக லேண்ட்லைன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி கால்களை (STD Calls) செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா கிடைக்கிறது. இந்த சலுகைகளுடன் இப்போது 500+ டிவி சேனல்களின் சலுகையும் கொடுக்கப்பட இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Launches IFTV Service With 500 Live TV Channels Mock Test Started in Tamil Nadu For FTTH Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X