மிகவும் எதிர்பார்த்த பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.! ரூ.998 திட்டத்திலும் அதிரடி திருத்தம்.!

|

மிகவும் எதிர்பார்த்த ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை இன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எனவே பயனர்கள் டிசம்பர் 24 முதல், அதாவது இன்று முதல் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ராஜஸ்தான் வட்டத்தில்

இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பிஎஸ்என்எல் ராஜஸ்தானின் ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டம் ஆரம்பத்தில் ராஜஸ்தான் வட்டத்தில் கிடைக்கும். பின்னர் அதிக இடங்களைஎட்டும் வாய்ப்புகள் உள்ளன.

வரம்பின் கீழ் எந்த

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட பி.வி. 199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தனசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பின் கீழ்எந்தநெட்வொர்க் உடனும் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

இந்த புதிய ரூ.199 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா வழங்கும்படி ரூ.998 திட்டத்தையும் அப்டேட் செய்துள்ளது. அதன்படி இந்த புதிய ரூ.199 திட்டம் மற்றும் திருத்தப்பட்ட ரூ.998 திட்டம் ஆகிய இரண்டும் 2020 டிசம்பர் 24 முதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே தெரிவிக்க்பபட்டுள்ளது.

.998 ப்ரீபெய்ட் திட்டம்

அதாவது பிஎஸ்என்எல் ரூ.998 ப்ரீபெய்ட் திட்டம் திருத்தப்பட்டுள்ளது. பின்பு இது 2020 டிசம்பர் 24 முதல் ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை மட்டும் வழங்குகிறது. இந்த திட்டம் டிசம்பர் 24-ஆம் தேதி (இன்று) முதல் திருத்தப்படும். பின்பு பின்னர் மார்ச் 23, 2021 அன்று அதன் பழைய நன்மைகளுக்குத் திரும்பும். ஏனெனில் பிஎஸ்என்எல் இந்த மாற்றத்தை ஒரு விளம்பர அடிப்படையிலேயே நிகழ்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 இப்போது திருத்தப்பட்ட எஸ்.டி.வி 998 ப்ரீபெய்ட் திட்டத்தின்

குறிப்பாக இப்போது திருத்தப்பட்ட எஸ்.டி.வி 998 ப்ரீபெய்ட் திட்டத்தின் புதிய நன்மையானது முதலில் கேரள வட்டத்திலும், பின்னர் மற்ற வட்டங்களுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம்

மேலும் அண்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.251 Work from Home ப்ரீபெய்ட் திட்டம் நல்ல வரவேற்பைபெற்றுள்ளது. பின்பு குறிப்பிட்ட ரூ.251 பிஎஸ்என்எல் திட்டம் அதன் பயனர்களுக்கு வேறு எந்த நன்மையும் இல்லாமல் வெறுமனே 70 ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதுவொரு டேட்டா ஆட்-ஆன் பேக் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bsnl launches highly anticipated Rs 199 prepaid plan!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X