Home
News

பிஎஸ்என்எல்-ன் டிட்டோ டிவி மற்றும் மொபைல் டெலிபோனி சேவை துவக்கம்.!

இந்த சேவைகளைப் பெற வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-ன் லேண்ட்லைன், மொபைல், பிராட்பேண்ட் இணைப்பை பெற்றிருக்க வேண்டும்.

By Muthuraj

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் மொபைல் டிவி சேவையான டிட்டோ டிவி' சேவை மற்றும் வரம்புகளுக்கான மொபைல் டெலிபோனி சேவையை துவங்கியுள்ளது.

மொபைல் டெலிபோனி சேவை மூலம் பயனர்கள் விரிச்சுவலாக தங்கள் மொபைல் சாதனங்களை தங்களின் லேண்ட்லைன் உடன் கோர்ட்லெஸ் முறையில் சின்க்கரணைசேஷன் செய்துகொள்ள முடியும். இந்த சேவைகளைப் பெற, வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-ன் லேண்ட்லைன், மொபைல் அல்லது பிராட்பேண்ட் இணைப்பு இருக்க வேண்டும்.

பிஎஸ்என்எல்-ன் படி சமீபத்திய நிலையான மொபைல் டெலிபோனி (எப்எம்டி) சேவையானது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலையான மொபைல் டெலிபோனி சேவையில் இருந்து வேறுபட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரோமிங்

இந்தியாவில் ரோமிங்

முந்தைய சேவை கூட மொபைல் மூலம் தங்கள் தரைவழி இணைப்பு நிகழ்த்தப்பட்டு அதன் மூலம் இந்தியாவில் ரோமிங் மற்றும் வெளிநாட்டு அழைப்புகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த சேவை பிஎஸ்என்எல் வட்டங்களுக்கு உள்ளே மட்டும் என்ற வரையறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

லேண்ட்லைன் சலுகை

லேண்ட்லைன் சலுகை

வாடிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச அழைப்புகள் மற்றும் இரவு நேரத்தில் இலவச அழைப்புகள் போன்ற பிஎஸ்என்எல்-ன் கவர்ச்சிகரமான லேண்ட்லைன் சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பிராட்பேண்ட் மோடம்

பிராட்பேண்ட் மோடம்

பிஎஸ்என்எல் ஒரு அறிக்கையில் "வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஒரு பயன்பாட்டை பதிவிறக்க வேண்டும் மற்றும் அவர்கள் ஒரு பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் மோடம் இணைப்பு வைத்திருந்தால் அவர்களின் ஸ்மார்ட்போன்கள் மூலம் வெளிச்செல்லும் அழைப்புக்களை செய்ய முடியும் என்று கூறியுள்ளது.

ஆட்-ஆன் சேவை

ஆட்-ஆன் சேவை

மேலும் பிஎஸ்என்எல் இந்த சேவையானது ஒரு மொபைல் ஆபரேட்டர் சேவையோ அல்லது வாடிக்கையாளர்களிடம் உள்ள சிம் சார்ந்த சேவையோ அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. தவிர, பிஎஸ்என்எல்-ன் அறிக்கையின்படி, இந்த வரம்புகளுக்குள்ளான சேவையை ஆட்-ஆன் சேவை வழியாக பெறலாம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனி தொலைபேசி எண் வழங்கப்படும். லிமிடெட் எப்எம்டி அழைப்பு கட்டணங்கள் அடிப்படை சேவையை போன்றே தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

மொபைல் டிவி சேவையை பொருத்தமட்டில், பிஎஸ்என்எல் மொபைல் பயனர்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிட்டோ டிவி பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் இன்ஸ்டால் செய்து ரிஜிஸ்டர் செய்து சேவையை அனுபவிக்க வேண்டியது தான். இந்த சேவை சந்தா அடிப்படையில் மாதத்திற்கு ரூ.20/-க்கு என தொடங்கி டேட்டா ஸ்பெஷல் ரீசார்ஜ் என ரூ.223/-வரை நீள்கிறது.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு

அடிப்படையில் இந்த டிட்டோ டிவி சேவையானது சந்தாதாரர்கள் எச்டி சேனல்களை உட்பட 80 சேனல்களை நேரடியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். இந்த சேவையில் மல்டி ஸ்க்ரீன் ஆப்ஷனும் உள்ளது. உடன் இந்த சேவை மொபைல், டேப்ளெட், டிவி அல்லது கணினியில் என ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு வகை சாதனங்களிலும் பார்க்க முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ : 3 மாத இலவச 100எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பைபர் சேவை ஆரம்பம்.!

Best Mobiles in India

English summary
BSNL launches 'Ditto TV' and limited fixed mobile telephony services. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X