சரியான நேரத்தில் தரமான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த மாதம் தொடக்கம் முதல் பல சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

அதன்படி இந்நிறுவனம் மலிவான ரூ.449 திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரத்த ஃபைபர் திட்டங்களை அறிமுகம் செய்தது. ஆனாலும் இந்நிறுவனத்தின் மலிவு விலை திட்டங்கள் விரைவில் நிறுத்தப்படும் என்ற ஊகங்கள் இருந்தன. இருந்தபோதிலும் இந்த மலிவு விலை பாரத்த ஃபைபர் திட்டங்களை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.449 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவான பாரத் ஃபைபர் திட்டம் இப்போது ரூ.449 என்கிற விலைக்கு கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் 3.3டிபி டேட்டா நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 30எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். பின்பு வரம்பற்ற அழைப்போடு லேண்ட்லைன் இணைப்பு போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது இந்த ரூ.449 திட்டம்.

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.799 திட்டம்
பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.799 திட்டம் ஆனது அதிவேக இணையத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு வேண்டி உருவாக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தில் 3.3 டிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். இதுதவிர இலவச லேண்ட்லைன் இணைப்பு மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.999 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் ரூ.999 திட்டம் ஆனது 3.3டிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். இதுதவிர இலவச லேண்ட்லைன் இணைப்பு மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.1499 திட்டம்
பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.1499 திட்டம் ஆனது 4டிபி அளவிலான டேட்டாவை வழங்கும். பின்பு இந்த திட்டத்தில் 300 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். இதுதவிர இலவச லேண்ட்லைன் இணைப்பு மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications