தினசரி 2ஜிபி டேட்டா, 395 நாட்கள் வேலிடிட்டி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் ஆக்ஸ்ட் 15-ம் தேதி 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அதன்படி தற்போது புதிய ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது ரூ.797 விலையில் ப்ரீபெய்ட்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.797 ப்ரீபெய்ட் திட்டமானது தனிசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 60 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்கள் ஆகும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால், 60 நாட்களுக்குப் பிறகு இந்த திட்டத்தில் பலன்கள் காலாவதியாகிவிடும். ஆனால் சிம் கார்டு செயலியில் இருக்கும். 60 நாட்களுக்கு பிறகு டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் தேவைப்படும்போது டாக்டைம் வவுச்சர்கள், டேட்டா வவுச்சர்கள் போன்றவற்றில் ரீசார்ஜ் செய்யலாம்.மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் எற்கனவே அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 18 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி வேலிடிட்டி 150 ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு நீங்கள் அழைப்புகளைச் செய்ய விரும்பினால், வேறு ஒரு திட்டத்தில் டாப்-அப் செய்ய வேண்டும்.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 197 ப்ரீபெய்ட் திட்டத்தில் 18 நாட்களுக்கு மட்டுமே டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 150 நாட்களுக்கு வேலிடிட்டி உள்ளது. எனவே இதன் மூலம் உள்வரும் அழைப்புகள் (incoming calls) 150 நாட்களுக்கு கிடைக்கும். கம்மி விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி மட்டும் தேடும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.118 மற்றும் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டங்கள்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-118 என்று கூறப்படும் ரூ.118 திட்டம் ஆனது 0.5 டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த ரூ.118 திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் STV_147 என்று கூறப்படும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 10ஜிபி டேட்டா, BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளிட்ட சில நன்மைகளை மட்டுமே வழங்குகிறது. இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-185 என்று கூறப்படும் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்கு தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம்80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் BSNL ட்யூன்ஸ் மற்றும்EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications