தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க பி.எஸ்.என்.என். புதிய முயற்சி

By Siva
|

இந்திய தொலைத்தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க பி.எஸ்.என்.எல் அரசுத்துறை நிறுவனம் தற்போது 100G ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் என்ற புதிய டெக்னாலஜியை நாடு முழுவதும் பயன்படுத்த உள்ளது. இதனால் பிராண்ட்பேட் வாடிக்கையாளர்கள் மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களின் இண்டர்நெட் வேகம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க பி.எஸ்.என்.என். புதிய முயற்சி

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சியால் ஆப்டிக்கல் ஃபைபர் உள்கட்டமைப்பு மூலம் 10G முதல் 100G வரை செயல்பாட்டின் மேம்படுத்தும் திறன் அதிகரிக்கவுள்ளது.

இந்த மேம்படுத்தும் திறன் அதிகரிப்பின் காரணமாக பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள், FTTH மற்றும் மொபைல்போன் வாடிக்கையாளர்கள் பலன் பெறுவர். மேலும் இந்த புதிய சேவை காரணமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த புதிய மேம்படுத்தும் திறன் காரணமாக மத்திய அரசின் திட்டங்களான பாரத் நெட், SWAN மற்றும் NKN ஆகியவைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் அனுபமா ஸ்ரீவஸ்த்வா அவர்கள் கூறியபோது, பி.எஸ்.என்.எல் மற்றும் பைஃபர் நெட்வொர்க் இணைப்பு நாட்டிற்கு மேலும் பல புதிய முன்னேற்றங்களை தரும் என்று உறுதியுடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தற்போது இந்த ஆப்டிக்கல் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் பணிகள் 45 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மீதியுள்ள 55 நகரங்களில் இந்த பணி வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பி.எஸ்.என்.எல் தற்போது மொத்தம் 115 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 24 மணி நேர வாடிக்கையாளர்கள் சேவை மையம் செயல்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு புதிய முயற்சியே இந்த ஆப்டிக்கல் டெக்னாலஜி என்றும் அவர் மேலும் பெருமையுடன் தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள நெட்வொர்க் ஆபரேட்டிங் செண்டர் மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆப்டிக்கல் நெட்வொர்க் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் 99.99 சதவீதம் முடிக்கப்பட்டு விடும் என்றும் பி.எஸ்.என்.எல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
At present 45 out of 100 cities are already put in place and started operating on NG-OTN.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X