Home
News

பட்டையை கிளப்பு! BSNL-ன் புதிய சூப்பர் ஸ்டார் பிளான்.. ஒரே ரீசார்ஜ்ல 2000GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

ஒரே ரீசார்ஜ்ஜில் 2000ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் பல நன்மைகளை வழங்கும் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) அறிமுகம் செய்துள்ளது.

அதென்ன திட்டம்? இது ஏன் சூப்பர் ஸ்டார் திட்டம் (Super Star Plan) என்று அழைக்கப்படுகிறது? இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் என்ன? இதன் கீழ் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

பல ஆண்டுகளாக.. பிஎஸ்என்எல் தான் கில்லாடி!

பல ஆண்டுகளாக.. பிஎஸ்என்எல் தான் கில்லாடி!

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் - இன்றோ.. நேற்றோ அல்ல - கடந்த பல ஆண்டுகளாகவே பிக்ஸடு-லைன் பிராட்பேண்ட் (Fixed-Line Broadband) சந்தையில் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டராக திகழ்ந்து வருகிறது.

பல ஆண்டுகளாக டிஎஸ்எல் (DSL - Digital subscriber line) கனெக்ஷன்களின் வழியாக பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வந்த பிஎஸ்என்எல், தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தன் வாடிக்கையாளர்களுக்கு பாரத் ஃபைபர் (Bharat Fibre) என்கிற பிராண்டின் கீழ் ஃபைபர் பிராட்பேண்ட் (Fibre Broadband) சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது பாரத் ஃபைபர் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு செல்லலும் நோக்கத்தின் கீழ் ஒரு தரமான மற்றும் புதிய பிராட்பேண்ட் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

அதென்ன பிளான்?

அதென்ன பிளான்?

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த சலுகைகளை வழங்கும் நோக்கத்தின் கீழ் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் (Super Star Premium Plus) என்று அழைக்கப்படும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்என்எல்-ன் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் திட்டத்தின் மாதாந்திர விலை ரூ.999 ஆகும். இந்த திட்டத்தின் கீழ், 150எம்பிபிஎஸ் (150Mbps) என்கிற வேகத்தின் கீழ் 2000GB அளவிலான டேட்டா கிடைக்கும். அதாவது மாதந்தோறும் உங்களுக்கு 2டிபி (2TB) அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும்.

குறிப்பிட்ட டேட்டா வரம்பு (Data Limit) தீர்ந்த பின்னர், சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 10எம்பிபிஎஸ் (10Mbps) ஆக குறைக்கப்படும்.

இலவசமாக வைஃபை ரூட்டரும் கிடைக்கும்!

இலவசமாக வைஃபை ரூட்டரும் கிடைக்கும்!

பிஎஸ்என்எல்-ன் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் திட்டத்தின் மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) வழங்கும். இருப்பினும் அது தொடர்பான டிவைஸ்களை நீங்கள் தனியாகவே வாங்க வேண்டும்.

மேலும் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் திட்டத்தின் கீழ் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு இலவச வைஃபை ரூட்டரும் (Free Wi-Fi Router) கிடைக்கும்.

ஓடிடி நன்மைகளும் உண்டு!

ஓடிடி நன்மைகளும் உண்டு!

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் திட்டத்தின் கீழ் ஓடிடி (OTT - Over The Top) நன்மைகளும் கிடைக்கும்.

அதாவது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) லயன்ஸ்கேட் (Lionsgate), ஷீமாரூமீ (ShemarooMe), ஹங்காமா (Hungama), சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), வூட் (Voot) மற்றும் யப்டிவி (YuppTV) போன்ற ஓடிடி சேவைகள் அணுக கிடைக்கும்.

சந்தையில் கிடைக்கும் பெஸ்ட் 150 எம்பிபிஎஸ் பிளான்!

சந்தையில் கிடைக்கும் பெஸ்ட் 150 எம்பிபிஎஸ் பிளான்!

தற்போது இந்திய பிராட்பேண்ட் சந்தையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பெஸ்ட் 150எம்பிபிஎஸ் திட்டங்களில் (Best 150Mpbs Plan) இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமே வேண்டாம்...

இலவச இன்ஸ்டாலேஷன் (Free Installation), நல்ல இண்டர்நெட் ஸ்பீட், போதுமான டேட்டா வரம்பு, இலவச ரவுட்டர் மற்றும் ஓடிடி நன்மைகள் என, பிஎஸ்என்எல்-ன் இந்த சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் திட்டமானது பட்டையை கிளப்புகிறது என்றே கூறலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Launched Super Star Premium Plus Plan With 2000GB Data Unlimited Voice Call For Just Rs 999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X