Home
News

பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதன்படி

அதன்படி இந்நிறுவனம் ரூ.99 மற்றும் ரூ.365 என இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு
மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றே கூறலாம். மேலும் இந்த திட்டங்களின் சலுகைகள் மற்றும் நன்மைகளைப்
பார்ப்போம்.

ரூ.99-ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.99-ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99-ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 18நாட்களுக்கு வழங்கப்படுகிறது,மொத்தமாக 36ஜிபி டேட்டா இந்த திட்டத்தல் கிடைக்கும். இது தவிர, பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 250 நிமிட இலவச அழைப்புகளும்கிடைக்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.365-ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.365-ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.365-ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 60நாட்களுக்கு வழங்கப்படுகிறது,
மொத்தமாக 120ஜிபி டேட்டா இந்த திட்டத்தல் கிடைக்கும்.மேலும் இது ஒரு நாளைக்கு 250 நிமிட அழைப்புகளுடன் வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் தமிழ்நாடு, சென்னை, கேரளா மற்றும் பிற வட்டங்களில் கிடைக்கின்றன என்று டெலிகாம் டாக் வலைதளம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பார்ப்போம்.

ரூ.1,699-ப்ரீபெய்ட்

ரூ.1,699-ப்ரீபெய்ட்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,699-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 3ஜிபி டேட்டா, தினசரி 100எஸ்எம்எஸ் உட்பட குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திட்டம் ஒரு வருடம் வேலிடிட்டி ஆதரவுடன் வருகிறது.

6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது

6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது

ஜியோ நிறுவனத்திற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது தனது பயனர்களுக்கு ஒவ்வொரு ஐந்து
நிமிட வாய்ஸ் கால்களுக்கும் 6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்துள்ளது. தெளிவாக இன்னொரு முறை கூறுகிறோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு(6)பைசாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ்

பிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ்

பிஎஸ்என்எல் ரூ.108 திட்டத்தின் கீழ், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு சேவை வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 500 மெசேஜ் மற்றும் 1 ஜிபி டேட்டா என அனைத்து சேவைகளும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Launched Rs.97 and Rs. 365 Prepaid Plans in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X