பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்
பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. மேலும் இது ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் மாறும் வகையில் அமைந்துள்ளது.

ரூ.798 பிளான் அறிவிப்பு:
பிஸ்என்எல் நிறுவனம், ரூ 798க்கு புதிய போஸ்டு பெய்டு ரிசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஆஃப்பர் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.799 ரிசார்ஜ் ஆஃப்பருக்கு போட்டியாக அமைந்துள்ளது.

கெத்துகாட்டிய பிஎஸ்என்எல்:
டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏற்பட்டட மாற்றங்கள் அனைத்தும் தெரிந்ததே. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவின.
இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை எப்போதும் பிஎஸ்என்எல் நிறுவனம் வைத்துள்ளது. ஆஃப்பர் , சலுகை என்று வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் சரியான விலைக்கு உரிய ரிசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது பிஎஸ்என்எல்.

அதிர வைத்த பிளான்கள்:
தற்போது ரூ 798 க்கு போஸ்டு பெய்டு ரிசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் 120 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்ஸ் , தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை பெற முடியும். மேலும் ஒரு வருடம் முழுக்க அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக பெற இயலும்.

4ஜியில் டேட்டா வேகம்:
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4 ஜி சேவை இன்னும் முழுமையாக செயல்பட தொடங்காததால் 2ஜி மற்றும் 3 ஜியி வேகத்தில்தான் டேட்டாவை பயன்படுத்த முடியும்.

ஆப்பு வைத்துள்ளது:
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ஏர்டெல் நிறுவனத்துக்கு ஆப்பு வைக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏற்கன நடஷ்டத்தில் இயங்கி வரும் ஏர்டெல்லுக்கு இது பெரும் அடியாகவும் இருக்கும் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications