BSNL: வெறும் ரூ.78-க்கு தினசரி 3ஜிபி டேட்டா வழங்கி அதிரடி காட்டிய பிஎஸ்என்எல்.! வெறுப்பில் ஜியோ.!
அன்மையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் கட்டண திட்டங்களை உயர்த்திவிட்டன, இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் மட்டும் அதிககட்டணங்களை பெறாமல் அதிரடியாக சலுகைகளை வழங்கி வருகிறது. அன்மையில் பல டெலிகாம் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் பல அதிரஎ சலுகைகள் மட்டும் திட்டங்களை கொணடுவந்துவிட்டது.

40சதவிகிதம்
மேலும் கடந்த ஆண்டு இறுதியில் ஜியோ, ஐடியா, வோடபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 40சதிவிகிதம் உயர்த்திவிட்டன, ஆனால் அந்த கூட்டத்துடன் பிஎஸ்என்எல் சேரவில்லை என்பது குறுப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனம் பழைய விலையில் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. மேலும்இந்த வருடம் பல்வேறு புதிய சலுகைகள் மட்டும் திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.78 டேட்டா எஸ்டிவி
பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் அருமையான திட்டத்தை வைத்துள்ளது, அதன் விலை ரூ.78-ஆகும். இதுவொரு டேட்டா எஸ்டிவி ஆகும். குறிப்பாக இந்த திட்டம் 8நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வெளிவருகிறது. இந்த செல்லுபடியாகும் காலகட்டத்தில் ரூ.78 டேட்டா எஸ்டிவி ஆனது பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, இந்த வரம்பு முடிந்த பிறகு 40கே.பி.பி.எஸ் என்கிற இணைய வேகம் அணுக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 250இலவச நிமிடங்களையும் வழங்குகிறது. இதுதவிர ரூ .78 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் வீடியோ அழைப்பையும் வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவையையும்தொகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அற்புதமான திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல்-ன் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் வழங்கும் நீண்ட நாள் வேலிடிட்டி திட்டங்களில் அதிகமான வேலிடிட்டி நாட்களுடன் கிடைக்கும் ஒரே திட்டம் இந்த திட்டம் மட்டும் தான். இந்த திட்டத்தின்படி பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா, டேட்டா அளவை தாண்டியதும் 80 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா, தினமும் 250 நிமிட வாயிஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் என்று 436 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
ஜனவரி 26ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி 2020க்குள், ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே பிஎஸ்என்எல் வழங்கும் இந்த சிறப்பு 436 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த காலத்திற்குள் ரீசார்ஜ் செய்யாமல், அதற்கு பின்னர் ரூ.1999 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு எப்பொழுதும் போல வெறும் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்படும் என்றநிபந்தனையை பிஎஸ்என்எல் வைத்துள்ளது.

பிஎஸ்என்எல்-ன் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்
அதிக நாட்கள் இல்லாமல் குறைந்த நாட்களில் வரம்பற்ற டேட்டாவுடன் ஒரு திட்டம் வேண்டுமெனில் அது ரூ.108 திட்டம் தான். இந்த திட்டத்தின்படி பயனர்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா, டேட்டா அளவை தாண்டியதும் 80 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா, தினமும் 250 நிமிட வாயிஸ் கால், முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் 500 எஸ்எம்எஸ்கள் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.548-திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.548-திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா வசதியை வழங்குகிறது, பின்பு இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 90நாட்கள் ஆகும். அந்த 5 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, 80 கே.பி.பி.எஸ் அளவிலான வேகத்தின் கீழ் வரம்பற்ற டேட்டா அணுக கிடைக்கும். இருப்பினும், இந்த ப்ரீபெய்ட் திட்டம் எந்த விதமான அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மையுடனும் வரவில்லை என்பதை
என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








