BSNL அதிரடி.. ரூ.58 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. என்னென்ன நன்மைகள்? எவ்வளவு நாள் வேலிடிட்டி?
பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது மலிவு விலையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.58 மற்றும் ரூ.59 விலையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகள் என்னென்ன மற்றும் வேலிடிட்டி எவ்வளவு நாள் என்பது குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.58 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 58 Prepaid Plan) ஆனது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். எனவே இந்த திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்வதற்கு உங்களிடம் ஒரு ஆக்டிவ் ப்ரீபெய்ட் பிளான் (Active Prepaid Plan) இருக்க வேண்டும். குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.58 திட்டம் ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா பயன்படுத்திய பின்பு இணைய வேகம்40 Kbps ஆகக் குறைகிறது.
பிஎஸ்என்எல் ரூ.59 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 59 Prepaid Plan) 7 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. ஆனால் எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு ரூ. 8.43 ஆகும். குறிப்பாக எக்ஸ்ட்ரா டேட்டா தேவைப்படும் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

மேலும் கடந்த வாரம் வெளியான தகவலின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவைகள் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும், பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 8 லட்சம் நுகர்வோரை பிஎஸ்என்எல் நிறுவனம் சேர்த்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ஆனது 4ஜி இயக்கப்பட்ட சிம்களில் மட்டும் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது. எனவே பயனர்கள் தங்களது பழைய சிம் கார்டை அகற்றிவிட்டு புதிய சிம் கார்டை பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 4ஜி சேவையை வழங்குவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனமான C-DOT ஆகியவற்றை உள்ளடக்கிய உள்நாட்டுக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளது.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ஆனது நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் இதுவரை 5ஜி சேவையை அறிமுகம் செய்யவில்லை. ஆனால் இன்னும் சில மாதங்களில் வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்த சில மாதங்களில் 5ஜி சேவையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








