BSNL பொளேர்.. ரூ.1 க்கு Azadi Ka Plan அறிமுகம்.. இலவச SIM, 30 நாள் வேலிடிட்டி, டெய்லி 2GB, வாய்ஸ், SMS!
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, தனது மொபைல் சேவைகளை முயற்சி செய்து பார்க்க விரும்பும் புதிய பயனர்களுக்காக வெறும் ரூ.1 க்கு ஆசாதி கா பிளான் (Azadi Ka Plan at Rs.1) என்கிற சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் "ரூ.1 க்கு ஆசாதி கா திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் உடன் உண்மையான டிஜிட்டல் சுதந்திரத்தை பெறுங்கள்" என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. பிஎஸ்என்எல் ஆசாதி கா பிளான் என்றால் என்ன? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த சிறப்பு திட்டம் எப்போது வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.1 என்கிற விலையின் கீழ் கிடைக்கும் இந்த திட்டம், தினமும் 2ஜிபி டேட்டா (Daily 2GB Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Daily 100 SMS) ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இது அனைத்தும் 30 நாட்கள் செல்லுபடியாகும் (30 Days Validity) மற்றும் உங்களுக்கு இலவச பிஎஸ்என்எல் சிம் கார்டும் (Free BSNL SIM Card) கிடைக்கும்.
இந்த சலுகை 2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். ஆர்வமுள்ள பயனர்கள் இந்த சலுகையை பெற தங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சில்லறை விற்பனையாளரை அணுகலாம். 2025 சுதந்திர தினத்திற்கு முன்னதாக தொடங்கப்பட்டு உள்ளதால், இந்த ரூ.1 ஆசாதி கா பிளானை, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 2025 சுதந்திர தின சலுகை (BSNL 2025 Independence Day Offer ) என்றும் கூறலாம்.
இது நிச்சயமாக பிஎஸ்என்எல் சேவையை நோக்கி புதிய பயனர்களை ஈர்க்கும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் உள்ள மக்கள் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை முயற்சிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இதன் மூலம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சந்தாதாரர் தளம் விரிவாகலாம். தற்போதைக்கு பிஎஸ்என்எல்-ன் சந்தாதாரர் தளம் மோசமான நிலையில் உள்ளது.
சமீபத்தில், டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) சமீபத்திய ரிப்போர்ட் ஆனது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சந்தாதாரர் தளம் குறித்த தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூன் 30, 2025 நிலவரப்படி, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டுமே தங்கள் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளன.
டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பொதுத்துறை நிறுவனங்கள் ஆன (அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் நிறுவனங்கள் ஆன) பிஎஸ்என்எல் 305,766 வயர்லெஸ் சந்தாதாரர்களையும், எம்டிஎன்எல் 152,657 சந்தாதாரர்களையும் இழந்து உள்ளன. சந்தைபங்குகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல் நிறுவனமானது 90.46 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களுடன் 7.78 சதவீத சந்தைப் பங்கையும், எம்என்டிஎல் நிறுவனமானது 0.31 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களுடன் 0.03 சதவீத சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது.
ஆனலும் மே 2025 இறுதியில் 1161.03 மில்லியனாக இருந்த மொத்த வயர்லெஸ் (மொபைல்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூன் 2025 இறுதியில் 1163.03 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஜூன் 2025 இறுதியில் 0.17 சதவீத மாதாந்திர வளர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வளர்ச்சிக்கு தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆன ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்களின் கீழ் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்களே காரணம்!


Click it and Unblock the Notifications








