ரூ.321 விலையில் 365 நாள் வேலிடிட்டி வழங்கும் BSNL திட்டம்.! ஆனால் இது இவர்களுக்கு மட்டுமே.!

|

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்காகப் பல சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அரசு நடத்தும் இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் மக்களுக்காகப் பல திட்டங்களை வழங்கி வந்தாலும், இந்த ஒரு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டம் மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.321 விலையில் 365 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது என்பது போக மற்றொரு சிறப்பை கொண்டுள்ளது.

BSNL அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.321 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.321 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ரூ.321 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது ஒரு முழு வருடத்திற்குச் செல்லுபடியாகும் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆம், இந்த திட்டம் BSNL சிம்மை ஒரு வருடம் முழுவதுமாக செயலில் வைத்திருக்க உதவுகிறது. BSNL அறிவிப்பின் படி, இந்த திட்டம் சராசரி மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பது தான் ஒரே ஒரு வருத்தம்.

இந்த ரீசார்ஜ் திட்டம் யாருக்கு மட்டும் கிடைக்கும்?

இந்த ரீசார்ஜ் திட்டம் யாருக்கு மட்டும் கிடைக்கும்?

அப்படியானால், இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் யாருக்காக அறிமுகம் செய்தது என்பது தானே உங்களுடைய கேள்வி? வாருங்கள் உண்மையைச் சொல்கிறோம். BSNL புதிதாக அறிமுகம் செய்துள்ள இந்த அட்டகாசமான திட்டம் தமிழகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முழு நன்மைகளையும் அனுபவிக்க நீங்கள் ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்க வேண்டும் என்று BSNL கூறியுள்ளது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

பிஎஸ்என்எல் ரூ.321 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன?

பிஎஸ்என்எல் ரூ.321 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, பிஎஸ்என்எல் ரூ 321 திட்டம் தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டம் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே தொடர்பு நடக்கும் போது பயனர்களுக்கு இலவச அழைப்பு நன்மையை வழங்குகிறது. மற்ற நேரத்தில் நிமிடத்திற்கு 7 பைசா வசூலிக்கப்படுகிறது. இது உள்ளூர் BSNL நெட்வொர்க்கில் இருக்கும் போது வசூலிக்கப்படும். அதேபோல், STD அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 15 பைசா வசூலிக்கப்படும்.

15 ஜிபி இலவச டேட்டா

15 ஜிபி இலவச டேட்டா

இத்துடன் பிஎஸ்என்எல் மாதத்திற்கு 250 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மாதத்திற்கு 15 ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படும். இது வருடாந்திர செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாக இது இருக்கிறது. மாநில காவல்துறைக்கு உதவும் வகையில் BSNL மேற்கொண்டுள்ள ஒரு சிறந்த முயற்சி இது என்று கூறப்பட்டுள்ளது. இப்படியொரு செயலை இதற்கு முன் எந்தவொரு தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் கூடச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

கம்மி விலையில் ஒரு வருட வேலிடிட்டி

கம்மி விலையில் ஒரு வருட வேலிடிட்டி

இந்த திட்டம் தமிழ்நாடு வட்டத்தின் கீழ் உள்ள BSNL இணையதளத்தில் மட்டும் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. ஆம், இது தமிழ்நாட்டுக் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் பிரத்தியேகமானது. தமிழ்நாடு தவிர மற்ற வட்டங்களின் சலுகைகளில் இந்த திட்டத்தை நீங்கள் காண முடியாது என்பதே உண்மை. நீங்கள் ஒரு காவல்துறை அதிகாரி என்றால், கம்மி விலையில் ஒரு வருட வேலிடிட்டி கிடைக்கும் இந்த திட்டத்தை மிஸ் செய்யலாம் ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.

BSNL 4ஜி சேவையை அறிமுகம் செய்தால் நிலைமை மாறிடுமா?

BSNL 4ஜி சேவையை அறிமுகம் செய்தால் நிலைமை மாறிடுமா?

BSNL நிறுவனம் தமிழ்நாடு மாநிலத்தில் 4G நெட்வொர்க்குகளை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 4ஜி சேவையை BSNL அறிமுகம் செய்தால், ஒரு மிக பெரிய மாற்றம் உருவாகும். காரணம், தனியார் நிறுவனங்கள் இப்போது வழங்கும் 4ஜி திட்டங்களின் விலை அதிகமாகவுள்ளது. BSNL ஒருவேளை வேகமாக 4ஜி சேவையை அறிமுகம் செய்தால், நமக்கு குறைந்த விலையில் 4ஜி திட்டங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், மக்கள் தனியார் நிறுவனத்தை விட்டு அரசு நடத்தும் நிறுவனம் பக்கம் மாற அதிக வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL Launched New Rs 321 Plan To Help Out The Tamil Nadu State Police

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X