Home
News

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பிஎஸ்என்எல்: BSNL TV ஆப் அறிமுகம்., 425 நாட்களுக்கு இலவசம்

பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தங்களது ஆப்களை முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் டிவி ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் அடுத்தடுத்து அறிவித்துக் கொண்டே வருகிறது.

அடுத்தடுத்து திட்டங்களை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்

அடுத்தடுத்து திட்டங்களை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்

இந்திய அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், அதன் 4ஜி சேவை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் துவங்குவதற்காகப் பலகட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் எப்போது இந்த 4ஜி சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பயனர்கள் காத்திருக்கின்றனர்.

4ஜி சேவை சோதனை

4ஜி சேவை சோதனை

சென்னை உட்படக் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பல்வேறு நகரங்களில் தனது 4ஜி சேவைக்கான சோதனையைச் பிஎஸ்என்எல் நிறுவனம் செய்து வருகிறது.

ரூ.1,999 திட்டம் அறிமுகம்

ரூ.1,999 திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.1,999 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இன்று (டிசம்பர் 25) முதல் ஜனவரி 31, 2020 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3 ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்களை 425 நாட்களுக்கு வழங்குகிறது.

பிஎஸ்என்எல் டிவி ஆப்

பிஎஸ்என்எல் டிவி ஆப்

பிஎஸ்என்எல் அறிவிப்பின்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமே பிஎஸ்என்எல் டிவி அணுகல் கிடைக்கிறது. இந்த ஆப் வரம்பற்ற இசை, திரைப்படங்கள், க்ரைம் டாக்யூமென்ட் என பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகிறது. எஸ்.எஸ்.டி.வி 97, எஸ்.டி.வி 365, எஸ்.டி.வி 399, எஸ்.டி.வி 997, எஸ்.டி.வி 998 மற்றும் எஸ்.டி.வி 1999 ஆகிய ஆறு ப்ரீபெய்ட் எஸ்.டி.விகளின் வழியாக ஒருவர் பிஎஸ்என்எல் டிவி சந்தாவைப் பெறலாம்.

டிவி ஆப் சேவை முறை

டிவி ஆப் சேவை முறை

இந்த ஆப் ஆனது வீடியோ-ஆன்-டிமாண்ட் சேவையாக மட்டுமே செயல்படுவதால், லைவ் டிவி சேவை இதில் கிடையாது. குறிப்பாக மேலே வழங்கப்பட்டுள்ள ரூ.1999 திட்டத்தை தேர்ந்தெடுத்தால் 425 நாட்களுக்கு இலவசமாக டிவி அணுகல்களை பெறலாம். இந்த ஆப் ஆனது தமிழ், பஞ்சாபி, போஜ்புரி, ராஜஸ்தானி, இந்தி, ஒடியா, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஹரியானா உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Bsnl launched its bsnl tv app to customers: How to watch free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X