ஜியோ மற்றும் ஏர்டெல் வைஃபை காலிங் சேவைக்கு போட்டியாக வந்தது பிஎஸ்என்எல் விங்ஸ்!

|

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் போட்டியாளரான பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனமுமே அதன் வைஃபை காலிங் சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் புதிய பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. வைஃபை காலிங் சேவைக்கு மிக நெருக்கமாக உள்ள இந்த சேவையில் சில வேறுபாடுகள் உள்ளது அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வைஃபை காலிங் சேவை

வைஃபை காலிங் சேவை

வைஃபை காலிங் சேவை என்ற இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் எல்.டி.இ நெட்வொர்க் அல்லது வழக்கமான மொபைல் நெட்வொர்க் பயன்படுத்தி இதுவரை அழைப்புகளை மேற்கொண்டு வந்தனர். தற்பொழுது இதற்குப் பதிலாக வைஃபை நெட்வொர்க் வழியாக அழைப்புகளைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வைஃபை காலிங்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வைஃபை காலிங்

ஏர்டெல் நிறுவனம் இதுவரை சுமார் 16 பிராண்ட்களில் உள்ள சுமார் 100-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன் மாடல்களில் புதிய வைஃபை காலிங் ஆதரவை அறிமுகம் செய்து அறிவித்துள்ளது. அதேபோல் ஜியோ சுமார் 150-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களில் அதன் வைஃபை காலிங் ஆதரவை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் வைஃபை காலிங் ஆதரவிற்கு நிகரான சேவையை பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற பெயரில் அறிவித்துள்ளது.

பறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்! வைரல் ஆகும் வீடியோ!பறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்! வைரல் ஆகும் வீடியோ!

பிஎஸ்என்எல் விங்ஸ் சேவை

பிஎஸ்என்எல் விங்ஸ் சேவை

பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையின் மூலம் வைஃபை காலிங் போன்ற இணைய வழியிலான அழைப்புகளைப் பயனர்கள் மேற்கொள்ள முடியும். ஆனால், பிஎஸ்என்எல் விங்ஸ் சேவைக்கும் இப்போது சந்தையில் கிடைக்கும் பிற வைஃபை காலிங் சேவைகளுக்கும் சில வேறுபாடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் விங்ஸ் சேவைக்கும் பிற வைஃபை காலிங் சேவைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையில் உள்ள சிறிய வித்தியாசம்

பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையில் உள்ள சிறிய வித்தியாசம்

வைஃபை காலிங் சேவைக்கான அடிப்படை தொழில்நுட்பம் ஒன்றுதான், ஆனால், சாதனத்தில் அழைப்புகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையில் சிறிய வித்தியாசம் உள்ளது. அதேபோல் இந்த இரண்டு சேவைகளாலும் செய்யப்படும் அழைப்புகள் VoIP அழைப்புகள் தன இதில் எந்த மாற்றமும் இல்லை.

பேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்பேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்

பிஎஸ்என்எல் விங்ஸ் சேவைக்கான ஆப்

பிஎஸ்என்எல் விங்ஸ் சேவைக்கான ஆப்

பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையின் கீழ் பயனர்கள் வைஃபை காலிங் செய்ய முதலில் பிஎஸ்என்எல் விங்ஸ் ஆப்-ஐ தங்களின் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையைப் பயன்படுத்த உங்களின் லாகின் விபரங்கள் தேவை, உங்களுக்கான லாகின் அக்கௌன்டை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து நீங்கள் பதிவு செய்து வாங்கிக் கொள்ளவேண்டும். இந்த செயலியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் காண்டாக்ட் விபரங்களை அணுக முடியும். அதன் வழியாக வைஃபை நெட்வொர்க் வழியிலான அழைப்புகளை மேற்கொள்ளவும் முடியும்.

இந்த வைஃபை காலிங் சேவைக்கு கட்டணம் என்ன?

இந்த வைஃபை காலிங் சேவைக்கு கட்டணம் என்ன?

பிஎஸ்என்எல் விங்ஸ் சேவையை பயன்படுத்தப் பயனர்கள் காட்டாயம் ரெஜிஸ்டரேஷன் செய்ய வேண்டும் என்பதே முக்கிய வேறுபாடாக இருக்கிறது. அதேநேரம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் வைஃபை காலிங் சேவைக்கு சந்தாதாரர்கள் தகுதியான ஸ்மார்ட்போனை வைத்திருந்தால் மட்டும் போதுமானது, கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் விங்ஸ் சேவை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஆண்டு வாடகையாக ரூ.1,099 செலுத்த வேண்டும்.

Best Mobiles in India

English summary
BSNL Launched BSNL Wings VoIP Calling Service That's Pretty Close To Jio And Airtel Wifi Calling Service : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X