BSNL அறிமுகம் செய்த புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரூ.200க்குள் மூன்று திட்டம்-இதில் பெஸ்ட் எது?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இந்தியாவில் நான்கு புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ. 200க்கு கீழ் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும், ரூ. 347 விலைக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தையும் இப்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால், நடுத்தர முறை செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும் பட்ஜெட் விலைக்குள் அதுவும் வெறும் 200 ரூபாய்க்குள் டேட்டா நன்மை, அழைப்பு நன்மை மற்றும் SMS நன்மை போன்ற நன்மைகளுடன் வருகிறது.

BSNL நிறுவனம் அறிமுகம் செய்த நான்கு திட்டங்கள்
BSNL நிறுவனம் தற்பொழுது ரூ. 200 விலைக்குள் அறிமுகம் செய்துள்ள அனைத்து புதிய திட்டங்களும் வெறும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகின்றது. அதேபோல், நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ. 347 திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ் இப்போது பயனர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம். இந்த நான்கு திட்டங்களில் எந்த திட்டம் சிறந்த திட்டமாக இருக்கும் என்பதையும் ஆராயலாம்.

BSNL இன் புதிய ரூ.184 திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
BSNL நிறுவனம் அறிமுகம் செய்த நான்கு புதிய திட்டங்களில் மிகவும் மலிவான விலை கொண்ட திட்டம் என்றால் அது இந்த ரூ. 184 விலை கொண்ட திட்டமாகத் தான் இருக்கும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தில் உங்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இது தவிர, எந்த நெட்வொர்க்கிற்கும் செல்லுபடியாகும் வரம்பற்ற அழைப்பு நன்மையும் கிடைக்கிறது. இத்துடன் பயனர்களுக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படுகிறது.

இத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன?
இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 1 ஜிபி டேட்டா நன்மை தீர்ந்த பிறகு இணைய வேகம் 80kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்துடன் கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், இந்த திட்டத்துடன் Lystn பாட்காஸ்டுக்கான அணுகல் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியான திட்டம் என்ன விலையில் கிடைக்கிறது. அதில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

BSNL இன் புதிய ரூ.185 திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
பிஎஸ்என்எல்லின் ரூ.185 திட்டமும் அபாரமானது. இதில், பயனருக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கும் முந்தைய திட்டத்திற்கும் இடையில் வெறும் 1 ரூபாய் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் உங்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இதனுடன் உங்களுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது. 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 80kbps ஆக இருக்கும். இத்துடன் ப்ரோக்ரஸிவ் வெப் APP இல் உள்ள சவால்கள் அரீனா மொபைல் கேமிங் சேவை தொகுப்பு இத்திட்டத்துடன் வழங்கப்படுகிறது.

BSNL இன் புதிய ரூ.186 திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
BSNL இன் இந்த புதிய திட்டம் பயனர் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதிலும் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை என்று அனைத்து நன்மைகளும் வழங்கப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள ரூ. 184 மற்றும் ரூ. 185 திட்டங்களில் கிடைக்கும் பலன்கள் இதில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இது BSNL ட்யூன்ஸ் மற்றும் ஹார்டி கேம்களுக்கான அணுகலை மட்டும் கூடுதலாகப் பெறுகிறது. வழக்கம் போல நிறுவனம் வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 80kbps ஆக மாற்றப்படும்.

BSNL இன் புதிய ரூ. 347 திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
BSNL அறிமுகம் செய்த இந்த புதிய ரூ. 347 ப்ரீபெய்டு திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா நன்மை, 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை ஆகிய அனைத்து வசதியைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

BSNL மீது மக்கள் ஆர்வம் காட்ட காரணம் என்ன?
கடந்த ஆண்டு நவம்பரில் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலைகளை அதிகரித்துள்ளன. மறுபுறம், பிஎஸ்என்எல் அதன் திட்டங்களின் விலையை அதிகரிக்காமல் அப்படியே பழைய விலையில் தொடர்ந்து வருகிறது. அதேபோல், BSNL நிறுவனம் இன்னும் பயனர்களுக்குத் தேவையான புதிய திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதனால், அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக மாறுகிறார்கள். உங்களுக்குத் தினசரி 1 ஜிபி டேட்டா பற்றாது என்றால், நீங்கள் BSNL வழங்கும் ரூ. 347 திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications