BSNL பயனர்களே.! செமயா 2 புது பிளான் வந்துருக்கு.! உடனே பாருங்க.. ரீசார்ஜ் பண்ணுங்க.!

|

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.

என்ன தான், Airtel, Jio, Vi என்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தினாலும், இன்னும் ஏராளமான பொதுமக்கள் BSNL சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, நகரத்தை விட்டு தொலைதூரத்தில் வசிக்கும் மக்களுக்கு BSNL தான் கெத்து.!

BSNL புதிதாக அறிமுகம் செய்துள்ள 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்.!

BSNL புதிதாக அறிமுகம் செய்துள்ள 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்.!

இப்படி பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் நிலையான நெட்வொர்க் சேவையை (Standard Network Service) இந்தியா முழுக்க தடையில்லாமல் வழங்கி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இப்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

நாம் இங்கு பேசும் புதிய பிஎஸ்என்எல் திட்டமானது ரூ.269 மற்றும் ரூ.769 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BSNL 4G மற்றும் 5G எப்போது இந்தியாவில் வெளிவரும்?

BSNL 4G மற்றும் 5G எப்போது இந்தியாவில் வெளிவரும்?

இந்த 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் முறையே 30 நாட்கள் மற்றும் 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BSNL 4G சேவைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிவரத் தொடங்கும் என்ற செய்திகளுக்கு மத்தியில் இந்த 2 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் BSNL நிறுவனம் அடுத்த ஆண்டு 5ஜி (5G) சேவையைக் கொண்டுவரத் தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளது.

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

BSNL 5G அடுத்த வருடத்தில் எப்போது லான்ச்?

BSNL 5G அடுத்த வருடத்தில் எப்போது லான்ச்?

BSNL வெளியிட்ட தகவலின் படி, BSNL 5G வரும் ஆகஸ்ட் 15, 2023 முதல் ஒவ்வொரு கட்டமாக, அதாவது, பேஸ் வாரியாக வெளிவருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தங்கள் 5G சேவைகளை இந்தியாவில் வழங்கத் தொடங்கியுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

மார்ச் 2024-க்குள் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் 5ஜியை முழுமையாக விரிவுபடுத்தும் என்று கூறியுள்ளது. அதேபோல், 2023-க்குள் ஜியோ தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தும்.

BSNL ரூ. 269 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

BSNL ரூ. 269 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

சரி, வாங்க BSNL அறிமுகம் செய்த புதிய ரூ. 269 மற்றும் ரூ. 769 ப்ரீபெய்ட் திட்டங்கள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

BSNL ரூ. 269 திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 SMS உடன் 30 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது.

இத்துடன் BSNL ட்யூன்ஸ், சாலேன்ஞ் அரினா கேம்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம்ஸ், லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட கூடுதல் பலன்களை இந்த திட்டம் வழங்குகிறது.

உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.! உஷார் மக்களே.!உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.! உஷார் மக்களே.!

BSNL ரூ. 769 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

BSNL ரூ. 769 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

BSNL வழங்கும் இந்த STV769 திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 SMS நன்மைகளுடன் வருகிறது.

இவை மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களைப் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இதில் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ் போன்ற பிற நன்மைகளும் கிடைக்கிறது.

இரண்டு திட்டங்களும் இப்போது பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்யக் கிடைக்கின்றன. இந்த திட்டம் உங்களுக்கு 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் இருக்கும் ஒரே ஒரு குறைபாடு என்ன தெரியுமா?

இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் இருக்கும் ஒரே ஒரு குறைபாடு என்ன தெரியுமா?

முழுமையாக 30 நாள் மற்றும் 90 நாள் கால அவகாசத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டங்கள் நல்ல விருப்பமாகும்.

இந்த திட்டத்தின் நன்மைகள் சிறப்பாக இருந்தாலும், BSNL நெட்வொர்க் சேவை இன்னும் 3G இல் செயல்படுவது ஒரு சிறிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.

இதே திட்டம் 4ஜி நெட்வொர்க் உடன் கிடைத்தால் சிறப்பாக இருந்திருக்கும். எது எப்படியாக இருந்தாலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் BSNL 4ஜி சேவையைத் துவங்கும் என்பதனால், மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
BSNL Launched 2 New Prepaid Recharge Plans Rs 269 and Rs 769 With 30 and 90 Days Validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X