சூப்பரா 2 புது பிளான் லான்ச் செய்த BSNL.! பார்த்தா கட்டாயமா ரீசார்ஜ் செய்வீங்க மக்களே.!

|

BSNL நிறுவனம் இந்த இறுதி காலாண்டில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் புதிதாக 2 ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன், அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்காக நிறுவனம் இப்போது புதிதாக என்டர்டைன்மெண்ட் மற்றும் கேமிங் வவுச்சர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் என்ன விலையில், என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

BSNL அறிமுகம் செய்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

BSNL அறிமுகம் செய்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

தீபாவளி சீசன் சலுகைகளின் ஒரு பகுதியாக BSNL அதன் பயனர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ப்ரீபெய்ட் பயனர்களுக்கும் பொருந்தும்.

இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் பல்வேறு நன்மைகளுடன் வருகின்றன. BSNL இப்போது பட்ஜெட் விலை பிரிவு மற்றும் மிகவும் விலையுயர்ந்த திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.

புதிய BSNL ரூ.439 மற்றும் ரூ.1198 திட்டங்கள்

புதிய BSNL ரூ.439 மற்றும் ரூ.1198 திட்டங்கள்

இந்த திட்டங்கள் முறையை ரூ.439 மற்றும் ரூ.1198 விலையில் வருகிறது. முதலில் நிறுவனம் வழங்கும் அதிக விலை திட்டமான ரூ. 1198 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

BSNL 2022 தீபாவளி ஸ்பெஷல் ப்ரீபெய்ட் திட்டமான ரூ.1198 திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது ஒரு வருட செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

சடனாக விலை குறைந்த Oppo Reno 7 Pro 5G.! சடனாக விலை குறைந்த Oppo Reno 7 Pro 5G.! "இப்படி" செஞ்சா ரூ.13,490-க்கு தட்டி தூக்கலாம்.!

BSNL ரூ.1198 ரீசார்ஜ் திட்டம் மற்றும் அதன் நன்மைகள்

BSNL ரூ.1198 ரீசார்ஜ் திட்டம் மற்றும் அதன் நன்மைகள்

இந்த ரூ.1198 ரீசார்ஜ் திட்டம், பயனர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை நன்மைகளுடன் நீண்ட கால திட்டத்தில் ஈடுபட விரும்புவோருக்கு இது பெஸ்ட் தேர்வாகும். இந்த திட்டம் 3 ஜிபி டேட்டா, 300 நிமிட அழைப்பு நன்மை மற்றும் 30 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

இது ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் புதுப்பிக்கப்படும். அனைத்து நன்மைகளும் மாத இறுதியில் காலாவதியாகிவிடும் என்றும், அடுத்த மாத பலன்களுக்கு எடுத்துச் செல்லப்படாது என்றும் BSNL தெளிவுபடுத்தியுள்ளது.

BSNL 2022 தீபாவளி ஆஃபர் ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL 2022 தீபாவளி ஆஃபர் ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த நிறுவனம் வழங்கும் மற்றொரு புதிய ப்ரீபெய்ட் கட்டணத் திட்டம் ரூ. 439 விலையில் வருகிறது. இது 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது முழுமையாக 3 மாதங்கள் செல்லுபடியாகும்.

இந்த பிஎஸ்என்எல் திட்டம் 300 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் டேட்டா சலுகை என்று எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?

BSNL இன் புதிய என்டர்டைன்மெண்ட் மற்றும் கேமிங் வவுச்சர்கள்

BSNL இன் புதிய என்டர்டைன்மெண்ட் மற்றும் கேமிங் வவுச்சர்கள்

இதுபோன்ற, தினசரி டேட்டா கிடைக்காத ரீசார்ஜ் திட்ட பயனர்களுக்கு டேட்டா சேவையை வழங்குவதற்காகவே நிறுவனம், BSNL எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கேமிங் வவுச்சர்களை இப்போது அறிமுகம் செய்துள்ளது.

BSNL இப்போது இரண்டு புதிய என்டர்டைன்மெண்ட் மற்றும் கேமிங் வவுச்சர்களையும் அறிமுகப்படுத்தியது. இதில் முதல் திட்டம் ரூ. 269 விலையிலும், இரண்டாவது திட்டம் ரூ.769 விலையுடன் வருகிறது.

புதிய ரீசார்ஜ் வவுச்சர்கள் என்ன நன்மைகளை வழங்குகிறது?

புதிய ரீசார்ஜ் வவுச்சர்கள் என்ன நன்மைகளை வழங்குகிறது?

ரூ. 269 ரீசார்ஜ் வவுச்சருடன், வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்,
பிஎஸ்என்எல் டியூன்கள், ரூ.2 லட்சம் வரை பரிசுகளுடன் கூடிய சேலஞ் அரினா கேம்ஸ் மற்றும் பிற பொழுதுபோக்கு நன்மைகளுடன் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

அதேபோல், மற்ற திட்டமான ரூ.769 திட்டமும் ரூ.269 வவுச்சர் போன்ற பலன்களுடன் வருகிறது. ஆனால் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது.

5G போன் வாங்குனா 5G போன் வாங்குனா "இந்த" போன்களை தான் வாங்கணும்.! பட்ஜெட்டில் பெஸ்ட் இதான்.!

இந்த BSNL ரீசார்ஜ் திட்டங்களில் எது பெஸ்ட்?

இந்த BSNL ரீசார்ஜ் திட்டங்களில் எது பெஸ்ட்?

மேலே குறிப்பிட்டுள்ள புதிய திட்டங்களுடன் உங்கள் ஃபோன் எண்ணை ரீசார்ஜ் செய்ய, நீங்கள் BSNL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லலாம் அல்லது நிறுவனத்தின் Selfcare மொபைல் ஆப்ஸை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து ரீசார்ஜ் செய்யலாம்.

இந்த திட்டங்களில் ரூ.1198 ரீசார்ஜ் திட்டம் சிறந்த ஒப்பந்தமாக தெரிகிறது. இது அனைத்து நன்மைகளுடன் 1வருட வேலிடிட்டி உடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Launched 2 New Prepaid Plans and Two Entertainment and Gaming Vouchers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X