பிஎஸ்என்எல்-ன் 27 வட்டங்களிலும் உடனடியாக அமல்படுத்தப்பட்ட புதிய திட்டம்; என்னது.?

தனியார் நிறுவனங்களிடம் இல்லாத பல திறன்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திடம் உள்ளது.

|

தனியார் நிறுவனங்களிடம் இல்லாத பல திறன்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திடம் உள்ளது. அது வேறொன்றுமில்லை லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் பிரிவின் கீழ் கிடைக்கும் மிகச் சிறப்பான திட்டங்கள் தான்.

அதில் யாருக்கும் சந்தேகம் என்றால், நேற்று அறிவிக்கப்பட்ட ரூ.99/- முதல் ரூ.399/- வரை நீளும் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்களை பற்றி அறிந்துகொள்ளவும்.

பிஎஸ்என்எல் லேண்ட்லைன் கனெக்ஷன் வாங்கிடலாமா.?

பிஎஸ்என்எல் லேண்ட்லைன் கனெக்ஷன் வாங்கிடலாமா.?

நேற்று அறிமுகமான, நான்கு புதிய டெய்லி டேட்டா பிராட்பேண்ட் திட்டங்களை தொடர்ந்து இன்று நிறுவனத்தின் அட்டகாசமானதொரு லேண்ட்லைன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் நன்மைகளை அறிந்துகொண்ட பின்னர், பேசாமல் நாமும் ஒரு பிஎஸ்என்எல் லேண்ட்லைன் கனெக்ஷன் வாங்கிடலாமா.? என்கிற எண்ணம் தானாக பிறக்கிறது.

செல்லுபடி காலமானது.?

செல்லுபடி காலமானது.?

பிஎஸ்என்எல் நிறுவனம், நாடு முழுவதும் தனது சந்தாதாரர்களுக்கான புதிய லேண்ட்லைன் திட்டத்துடன் வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் ரூ.99/-க்கு, நாடு முழுவதுமான, வரம்பில்லாத பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடி காலமானது ஒரு மாதம் ஆகும்.

அறிமுகத்திற்கு காரணம் - பார்தி ஏர்டெல் தான்.!

அறிமுகத்திற்கு காரணம் - பார்தி ஏர்டெல் தான்.!

துரதிருஷ்டவசமாக, இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் குரல் அழைப்பு நன்மைகளானது பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) நெட்வொர்க்கிற்கு மட்டும் தான் என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ஆஃப்-நெட் அழைப்புகளுக்கான திட்டங்களும் அணுக கிடைக்கின்றன. இருந்தாலும் இந்த குறிப்பிட்ட ரூ.99/-ன் அறிமுகத்திற்கு காரணம் - பார்தி ஏர்டெல் தான். ஏனெனில் ஏர்டெல் அதன் பிராட்பேண்ட் திட்டங்களின் வழியாக இலவச குரல் அழைப்புகளை வழங்கி வழங்குகிறது.

உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.!

உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.!

பிஎஸ்என்எல்-ன் இந்த ரூ.99/- லேண்ட்லைன் திட்டமானது நிறுவனத்தின் அனைத்து 27 பிராந்திய தொலைத் தொடர்பு வட்டங்களிலும் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பிஎஸ்என்எல் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும், மேலும் அரசு நடத்தும் டெலிகாம் சேவை வழங்குநரின் லேண்ட்லைன் சந்தாதாரர்களை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நேற்று அறிமுகமான 4 திட்டங்கள்.!

நேற்று அறிமுகமான 4 திட்டங்கள்.!

இந்தியாவின் முன்னணி வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை வழங்குநரான பிஎஸ்என்எல் இப்போது ரூ.99/-ல் தொடங்கி மொத்தம் நான்கு புதிய FTTH திட்டங்களை விலகி உள்ளது. இந்த திட்டங்களின் பிராதன சிறப்பம்சம் என்னவெனில் இவைகள் தினசரி டேட்டா வரம்பு நன்மைகளுடன் வெளியாகியுள்ளது.

நாள் ஒன்றிற்கு குறிப்பிட்ட டேட்டா என்கிற நன்மை.!

நாள் ஒன்றிற்கு குறிப்பிட்ட டேட்டா என்கிற நன்மை.!

அதாவது, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் உருவான நாள் ஒன்றிற்கு 1ஜிபி அல்லது 2 ஜிபி என்கிற பாணியின் கீழ், சமீப காலமாக டெலிகாம் நிறுவனங்களிடம் கிடைக்கும் வரம்பற்ற ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களை போலவே நாள் ஒன்றிற்கு குறிப்பிட்ட டேட்டா என்கிற நன்மையை வழங்கும்.

45 ஜிபி முதல் 600 ஜிபி வரையிலான டேட்டா.!

45 ஜிபி முதல் 600 ஜிபி வரையிலான டேட்டா.!

அறிமுகமாகியுள்ள ரூ.99, ரூ.199, ரூ.299 மற்றும் ரூ.399/- பிபிஜி யுஎல்எல் காம்போ பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது 45 ஜிபி முதல் 600 ஜிபி வரையிலான டேட்டா நன்மையை வழங்குகிறது. 20 Mbps என்கிற தரவு வேகத்தை கொண்ட இந்த அனைத்து நான்கு திட்டங்களுமே தினசரி டேட்டா வரம்பு முடிந்த பின்னர் 1 Mbps என்கிற தரவு வேகத்தை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பான்- இந்தியா அடிப்படையின் கீழ் உருவான திட்டங்கள்.!

பான்- இந்தியா அடிப்படையின் கீழ் உருவான திட்டங்கள்.!

டேட்டா நன்மையை தவிர்த்து, இந்த திட்டங்கள் நாடு முழுவதும் எந்த நெட்வொர்க்குக்கும் உடனாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் அளிக்கின்றன. இந்த திட்டங்கள் பான்- இந்தியா அடிப்படையின் கீழ் உருவான திட்டங்கள் என்பதால், அறிமுகப்படுத்திய தேதி முதல் 90 நாட்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த திட்டங்கள் என்ன டேட்டா நன்மை.?

எந்தெந்த திட்டங்கள் என்ன டேட்டா நன்மை.?

அதாவது இதுவொரு விளம்பர அடிப்படையிலான திட்டங்கள் ஆகும். இந்த 4 திட்டங்களும் அந்தமான் & நிக்கோபார் டெலிகாம் வட்டத்தில் செல்லத்தக்கதாக இல்லை என்று பிஎஸ்என்எல் கூறியதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இனி எந்தெந்த திட்டங்கள் என்ன டேட்டா நன்மையை வழங்குகிறது என்பதை விரிவாக காண்போம்.

பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ யுஎல்எல் 45 ஜிபி திட்டம்.!

பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ யுஎல்எல் 45 ஜிபி திட்டம்.!

முதலாவதாக, வெளியான நான்கு திட்டங்களிலும் மலிவான திட்டமாக இருக்கும் ரூ.99/-ன் நன்மைகளை பற்றி காண்போம். பிஎஸ்என்எல் ரூ.99/- ஆனது நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது மொத்தம் 45 ஜிபி அளவிலான டேட்டா அணுக கிடைக்கும். டேட்டா வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகமானது 1 Mbps ஆக குறைக்கப்படும்.

பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ யுஎல்எல் 150 ஜிபி திட்டம்.!

பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ யுஎல்எல் 150 ஜிபி திட்டம்.!

இரண்டாவது திட்டமான பிஎஸ்என்எல் ரூ.150/- ஆனது நாள் ஒன்றிற்கு 5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது மொத்தம் 150 ஜிபி அளவிலான டேட்டா அணுக கிடைக்கும். ரூ.99-ஐ போலவே இந்த திட்டத்தின் தினசரி டேட்டா வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகமானது 1 Mbps ஆக குறையும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ யுஎல்எல் 300 ஜிபி & 600 ஜிபி திட்டம்.!

பிஎஸ்என்எல் பிபிஜி காம்போ யுஎல்எல் 300 ஜிபி & 600 ஜிபி திட்டம்.!

கடைசியாக உள்ள இரண்டு திட்டங்களும், நிறுவனத்தின் அதிக அளவிலான டேட்டாவை வழங்கும் திட்டங்களாக உள்ளன. பிஎஸ்என்எல் ரூ.299/- மற்றும் ரூ.399/- ஆனது முறையே நாள் ஒன்றிற்கு 10 ஜிபி மற்றும் 20 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது மொத்தம் 300 ஜிபி மற்றும் 600 ஜிபி அளவிலான டேட்டா அணுக கிடைக்கும். முதல் இரண்டு திட்டங்களை போலவே இதிலும் தினசரி டேட்டா வரம்புகள் முடிந்ததும் இணைய வேகமானது 1 Mbps ஆக குறைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
BSNL Landline Users Can Enjoy Unlimited Voice Calls at Rs 99 Per Month. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X